ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித் கைது செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறைக் சுமத்தியுள்ளக் குற்றச்சாட்டுகள் முரணாக உள்ளதாக அவரது பிணை மனுமீதான விசாரணையின் போது அவரது வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 2௦2௦ அன்று, வடகிழக்கு டெல்லி பகுதியில் கலவரம் தொடர்பாகக் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் கலித் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கூடுதல் நீதிபதி அமிதாப் ரவாத் இதுகுறித்து தெரிவித்த காலித்தின் வழக்கறிஞர் திரைதீப் பைஸ், உமர் காலித்தின் மீது குறிவைத்து திட்டமிட்டு முதல் தகவல் அறிக்கைப் பதியப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், டெல்லி காவல்துறை சுமத்தியக் குற்றச்சாட்டில் இரண்டு முரண்கள் உள்ளன என்றும் திரைதீப் பைஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாது, மகாராஷ்டிரா மாநிலத்தில் உமர் காலித் பேசியக் காணொளியில் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாகக் காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால், அந்தக் கானொளியில் “காந்திஜியை அடிப்படையாகக் கொண்ட ஒற்றுமை குறித்தே உமர் காலித் பேசியுள்ளார் . இது பயங்கரவாதம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பேச்சின் உள்ளடக்கம் தேசத்துரோக குற்றமில்லை. அவர் ஜனநாயகரீதியிலான அதிகாரத்தைப் பற்றியே பேசுகிறார். அவர் காந்தியைக் மேற்கோளாகவே குறிபிட்டுள்ளார்”.என்று வழக்கறிஞர் திரைதீப் பைஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகையின் போது கலவரத்தை ஏற்படுத்த ஜனவரி 8 அன்று காலித் சதித்திட்டம் தீட்டினார் என்றும் காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், அவரது வருகைகுறித்த செய்தியே பிப்ரவரி மாதம் தான் அறிவிக்கப்பட்டது என்றும் வழக்கறிஞர் திரைதீப் பைஸ் கூறியுள்ளார்.
எனவே, இது போன்ற பொய்கள் ஒரு அவல நகைச்சுவை. இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை புனையப்பட்டது என்று வெளிப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் திரைதீப் பைஸ் உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் சமர்பிக்கப்பட்டுள்ள காணொளி குறித்த அனைத்து ஆவணங்களும் யூடியூப் மற்றும் ட்வீட்டிலிருந்து எடுக்கப்பட்டவை. அங்கு சென்று கலந்து கொள்ளும் பொறுப்பு பத்திரிக்கையாளர்களுக்கு இல்லையா? இவை அரசியல்வாதியின் ட்வீட்டிலிருந்து நகலெடுப்பட்டுள்ளது. இது பத்திரிக்கைத்துறையின் மரணம் என்று கூடுதல் நீதிபதி அமிதாப் ரவாத் முன் வழக்கறிஞர் திரைதீப் பைஸ் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.