நானும் என் மொத்த குடும்பமும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளோம் என்று தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, இன்று (பிப்பிரவரி 14), தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை பகிர்ந்துள்ளார். அதில், “2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டுக்கு பின்னான புதிய ஜம்மு காஷ்மீர் இதுதான். எவ்வித விளக்கமும் அளிக்கப்படாமல், நாங்கள் எங்கள் வீடுகளில் அடைக்கப்பட்டிருக்கிறோம். இது எவ்வளவு தூரம் மோசமாக இருக்கிறது என்றால், நானும் என் தந்தையும் (தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்) என் வீட்டில் அடைக்கப்பட்டிருக்கிறோம் என்றால், என் சகோதரியும் அவரது குழந்தைகளும் அவருடைய வீட்டில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
This is the “naya/new J&K” after Aug 2019. We get locked up in our homes with no explanation. It’s bad enough they’ve locked my father (a sitting MP) & me in our home, they’ve locked my sister & her kids in their home as well. pic.twitter.com/89vOgjD5WM
— Omar Abdullah (@OmarAbdullah) February 14, 2021
மேலும், தனது ட்வீட்டில் வீட்டிற்கு வெளியே காவல்துறையின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படத்தையும் இணைத்துள்ளார்.
‘யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான்’: மோடியின் அரசும் பொதுநலனும் – ரவி ஜோஷி
மற்றொரு ட்வீட்டில், “சலோ, உங்கள் புதிய மாடல் ஜனநாயகம் என்பது, நாங்கள் எவ்விளக்கும் அளிக்கப்படாமல், எங்கள் வீடுகளில் சிறை வைக்கப்பட்டிருப்பதுதான். எல்லாவற்றுக்கும் மேலாக, எங்கள் வீட்டு வேலைக்காரர்களை கூட உள்ளே அனுமதியாமல் இருக்கிறீர்கள்.” என்று உமர் அப்துல்லா விமர்சித்துள்ளார்.
நேற்று (பிப்பிரவரி 14), ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான மெஹ்பூபா முப்தி, தான் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.