Aran Sei

‘ரஷ்ய படையெடுப்பை முகலாயர்கள் ராஜபுத்திரர்களை படுகொலை செய்ததோடு ஒப்பிடலாம்’ –உக்ரைன் தூதர்

க்ரைன் ரஷ்யா போரில் ஒரு இந்திய மாணவர் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள உக்ரைன், போரை நிறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் தருமாறு உலகத் தலைவர்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தனது நாட்டிற்கு மனிதாபிமான முறையில் உதவிகளை வழங்கியதற்காக இந்தியாவுக்கு நன்றி கூறியுள்ள உக்ரைன் தூதர் இகோர் பொலிகா, “நிவாரணப் பொருட்களை ஏற்றி வரும் முதல் விமானம் போலந்தில் மார்ச் 1 அன்று இரவு தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

‘போரை நிறுத்த ரஷ்யாவிடம் இந்தியா தைரியமாக பேச வேண்டும்’ –வாய் வார்த்தைகளை கைவிட ப.சிதம்பரம் வலியுறுத்தல்

“உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பை ராஜபுத்திரர்களுக்கு எதிராக முகலாயர்கள் நடத்திய படுகொலையுடன் ஒப்பிட முடியும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு புடினுக்கு எதிராக தங்களது அனைத்து சக்திகளையும் பயன்படுத்துமாறு மோடி ஜி உட்பட அனைத்து செல்வாக்கு மிக்க உலக தலைவர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உக்ரைன் மீதான குண்டுவீச்சை ரஷ்யா நிறுத்த வேண்டும். ரஷ்ய இராணுவம் தற்போது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குல் நடத்துகிறது” என்று இகோர் பொலிகா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Source: PTI

தொடர்புடைய பதிவுகள்:

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 1

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 2

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 3

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்