Aran Sei

இந்தியா கொண்டு வரப்படும் நவீனின் உடல் : உடலை மருத்துவமனைக்கு தானம் செய்ய பெற்றோர் முடிவு

க்ரைனின் கார்கிவ் நகரில் கொல்லப்பட்ட இந்திய மாணவர் நவீனின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்ய முடிவு செய்துள்ளதாக அவரின் தந்தை சங்கரப்பா இன்று (மார்ச் 19) தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஏழைகள் படிக்க முடியாது – உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் தாய் உருக்கம்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், மார்ச் 1 அன்று கார்கிவ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 21 வயது மாணவர் நவீன், உணவு வாங்கச் சென்ற போது, ​​நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவு துறை தெரிவித்திருந்தது.

“என் மகன் மருத்துவத் துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்தான், அது நடக்கவில்லை. குறைந்த பட்சம் அவனது உடலானது மருத்துவ மாணவர்களின் படிப்புக்குப் பயன்படும் என்ற எண்ணத்தில்தான், நாங்கள், மருத்துவ ஆராய்ச்சிக்காக நவீனின் உடலை தானம் செய்ய முடிவு செய்துள்ளோம்” என்று நவீனின் தந்தை சங்கரப்பா கூறியுள்ளார்.

பாகுபாடு காட்டும் உக்ரைனிய அதிகாரிகள் – இந்திய மாணவர்கள் குற்றச்சாட்டு

வரும் திங்கள்கிழமை (மார்ச் 21) அதிகாலை 3 மணிக்கு நவீனின் உடல் நவீனின் உடல் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்து சேரும் என்று கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார்.

“விமான நிலையத்திலிருந்து எங்கள் கிராமத்திற்குக் காலை 9 மணிக்கு நவீனின் உடல் வந்து சேரும். அதன் பின்னர் வீர சைவ முறைப்படி பூஜை செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைப்போம். பிறகு தாவணகெரே எஸ்.எஸ் மருத்துவமனைக்கு அவரது உடலை தானம் செய்ய உள்ளோம்” என்று நவீனின் தந்தை தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் கொல்லப்பட்ட கர்நாடக மாணவரின் இறப்பிற்கு நீட் தேர்வே காரணம்: எச்.டி.குமாரசாமி குற்றச்சாட்டு

மரணமடைந்த மாணவர் நவீனின் குடும்பத்திற்கு 25 லட்சம் காசோலையைக் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும், நவீனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்