அண்மையில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை இந்தியா கண்டிக்கவில்லை. இந்நிலையில், உக்ரைனிலிருந்து வெளியேறி வரும் இந்திய மாணவர்களை அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் மனிதாபிமானமற்ற முறையில் மோசமாக நடத்துவதாக, உக்ரைன்-போலந்து எல்லையில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
72 மணி நேரத்திற்கும் மேலாக கடும் குளிரில் சிக்கித் தவித்த பல மாணவர்களை உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் உதைத்து, அடித்து, இழுத்துச் சென்றதாகவும், சில மாணவர்களின் கைப்பேசிகளைப் பறித்ததாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்திய மாணவர்களை முதலில் உக்ரைனிலிருந்து போலந்து சென்று அங்கிருந்து இந்தியா அழைத்து வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி போலந்து அரசும் உதவ முன்வந்துள்ளது. அவ்வகையில் சில மாணவர்கள் உக்ரைனிலிருந்து போலந்திற்கு சென்றுள்ளனர். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு எங்களை போலந்திற்குள் நுழைவதை அதிகாரிகள் தடுத்ததாக சந்தீப் கவுர் என்ற மாணவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-போலந்து எல்லையில் உள்ள உக்ரைன் அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்க இந்தியத் தூதரகத்தில் இருந்து எந்த அதிகாரிகளும் வரவில்லை என்று மாணவர்கள் தகராறு செய்துள்ளனர்.
உக்ரைன்-ரஷ்யா போரில் ரஷ்யாவை இந்தியா ஆதரிப்பது உக்ரைனிய அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை, ஆதலால் அவர்கள் எங்களை மோசமாக நடத்துகிறார்கள் என்ற மருத்துவ மாணவி மோனிஷா கல்புர்கி கூறியுள்ளார்.
“நாங்கள் டெர்னோபிலில் இருந்து போலந்து எல்லையை கடக்க அதிகாலை 4 மணிக்குப் புறப்பட்டோம். நாங்கள் உக்ரைனிலிருந்து வெளியேறலாம் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்திருந்தது. ஆனால் எல்லையில் எங்களை உக்ரைன் இராணுவம் தடுத்து நிறுத்தியது. அந்தப் பகுதியில் உள்ள 3 டிகிரி கடும் குளிரில் இந்திய மாணவர்கள் பெரும்பாலோர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக ஒரு மாணவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-போலந்து எல்லையில் உள்ள உக்ரைன் அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்க இந்திய தூதரகத்தில் இருந்து எந்த அதிகாரிகளும் வரவில்லை என்று உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்கள் கூறியதை குறித்து கேள்வி கேட்டதற்கு வெளியுறவு துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்
Source : the new indian express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.