உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக், ரஷ்ய அரசு ஊடகங்களுக்குத் தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து ரஷ்யாவில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதலத்திற்கு ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபேஸ்புக் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இதன் அடிப்படையில், ரஷ்யாவின் அரசு ஊடகங்கள் ஃபேஸ்புக்கில் எந்தவொரு தகவல் அல்லது விளம்பரங்களை பதிவிட முடியாது. இதே போன்று விளம்பரங்களால் கிடைக்கும் வருமானமும் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தூதரகம் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறது – உக்ரைனில் காயமடைந்த இந்திய மாணவர் குற்றச்சாட்டு
முன்னரே, போர் குறித்து “போலி செய்திகளை” வெளியிடுபவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை என்று ரஷ்யா அறிவித்திருந்த்து. பத்திரிகையாளர்கள் மீது ரஷ்யா ஏற்கனவே கடுமையான புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்நிலையில், ரஷ்யாவில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களின் அணுகலை தடுத்திட அந்நாட்டு அரசு முடிவு செய்திருந்தது. இதன்படி, ரஷ்யாவின் ஊடக ஒழுங்குமுறை நிறுவனம் அந்நாட்டில் பேஸ்புக்கிற்கான அணுகலைத் தடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி: இந்தியாவில் சமையல் எண்ணெய்கள் விலை உயர்வு
ரஷ்யாவில் டுவிட்டருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேஸ்புக் தடை செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் தற்போது டுவிட்டரும் தடை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், உக்ரைனில் நடத்தப்பட்டு வரும் சிறப்பு ராணுவ நடவடிக்கை (போர்) குறித்து பேஸ்புக்கில் பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் கருத்துக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, உக்ரைன் மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் ரஷிய அரசு செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால், ரஷியா டுடே, ஸ்புட்னிக் போன்ற ரஷிய அரசு ஊடகங்கள் ஐரோப்பாவில் ஒளிபரப்பாவதை பேஸ்புக் நிறுவனம் தடுத்துள்ளது.
source: theguardian
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.