Aran Sei

போரை நிறுத்த ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – உக்ரைன் அதிபர் அறிவிப்பு

Credit : RT.com

போரை முடிவுக்கு கொண்டு வர நாங்கள் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பயப்படவில்லை. ஆனால், அவ்வாறு செய்வதற்கு எங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவு தாருங்கள் என உக்ரைன் அதிபர் வலோதிமிர் செலேன்சுக்கி தெரிவித்துள்ளார்.

நீங்கள்(மேற்கத்திய நாடுகள்) எங்களுடன் உள்ளீர்களா என நான் அவர்களிடம் நேரடியாக கேட்டேன் என தெரிவித்த செலென்சுக்கி, “அவர்கள் எங்களுடன் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், எங்களுடன் கூட்டணி சேர விரும்பவில்லை. ஐரோப்பாவைச் சேர்ந்த 27 தலைவர்களிடம் நேரடியாக கேட்டேன். உக்ரைன் நேட்டோவில் இருக்குமா என்று?. அவர்கள் பயப்படுகிறார்கள், அதனால் பதிலளிக்கவில்லை” என  குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு: ஷாகாக்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க திட்டம்

”நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். எங்களுக்காக போர் புரிய யார் தயாராக இருக்கிறார்கள்? சத்தியமாக,  நான் யாரையும் பார்க்கவில்லை. எங்களுக்கு நேட்டோ உறுப்பினர் உத்திரவாதத்தை யார் எங்களுக்கு வழங்குவார்கள்?. உண்மையில், அனைவரும் பயப்படுகிறார்கள்.” என அவர் கூறியுள்ளார்.

பிரச்னையை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனக் கூறிய செலேன்சுக்கி, “நாங்கள் ரஷ்யாவைக் கண்டு பயப்படவில்லை. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பயப்படவில்லை. நடுநிலையாக இருந்து எங்களுக்கான பாதுகாப்பு உத்திரவாதங்களை யார் வழங்குவார்கள்?. நாங்கள் தற்போது நேட்டோவில் இல்லை. எங்களுக்கு என்ன பாதுகாப்பு உத்திரவாதங்கள் உள்ளன. யார் எங்களுக்கு அதை வழங்குவார்கள் ”என  தெரிவித்துள்ளார்.

Source : RT.com

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்