Aran Sei

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தாமதம்: பதவி நீக்கம் செய்யப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் – உக்ரெய்ன் நாடாளுமன்றம் அதிரடி

credits : kyiv post

க்களுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் ஏற்படுத்திய சுகாதாரத்துறை அமைச்சரை, உக்ரேனிய நாடாளுமன்றம் பதவியிலிருந்து நீக்கியுள்ளது.

கொரோனா நோய்த்தொற்றால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில், உக்ரெய்னும் இடம்பெற்றுள்ளது. இந்நாட்டில், இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகாமனோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 48,469 பேர் மரணமடைந்துள்ளனர்.

சுமார், 4 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்டுள்ள, இந்நாட்டில், 10 லட்சத்திற்கும் குறைவான மக்களே கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர். அதுவும் ஒரு முறை மட்டுமே போட்டுக் கொண்டுள்ளனர், இரண்டாவது முறை போடும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கவில்லை.

இந்தியாவிற்கு 60 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் – அமெரிக்க அதிபரிடம் மக்கள் உரிமை செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள்

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய, உக்ரெய்ன் நாட்டின் பிரதமர், டெனிஸ் ஷ்மய்கல், “2021 ஆம் ஆண்டில், சுகாதாரத்துறை அமைச்சர் எதிர்கொண்ட முக்கியமான சவால், உக்ரெய்ன் நாட்டுக்குத் தேவையான தடுப்பூசிகளை, இந்த ஆண்டின் முதற்பாதிக்குள் கொண்டு வருவது. ஆனால் இதை, அமைச்சர் சரியாக கையாளவில்லை. இதுவரை, 20 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள்  மட்டுமே உக்ரெய்ன் நாட்டுக்கு வந்துள்ளது. இது அமைச்சரின் திறன் வாய்ந்த செயல் என்று கூற இயலாது” என்று கூறி, அவரை பதவியிலிருந்து அகற்ற கோரி வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இறந்த தாயின் அருகில் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட 5 மாதக்குழந்தை – இஸ்ரேல் தாக்குதலின் பேரவலம்

இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக எதிர்த்து வாக்களித்ததால் ( 292-1), சுகாதாரத்துறை அமைச்சரான மக்சிம் ஸ்டெபனாவ் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் ஆகும் –  சீரம் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி அதார் பூனாவாலா தகவல்

இது தொடர்பாக பேசிய ஸ்டெபனாவ்,  ”இந்தப் பெருந்தொற்றை எதிர்த்து என்னால் செய்ய இயன்ற அனைத்தையும் செய்தேன், சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டங்களையும் வைத்திருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

அரசை விமர்சித்த நிபுணர் குழு உறுப்பினர் ஷாஹித் ஜமீல் ராஜினாமா – அரசின் நிர்பந்தமே காரணம் என்று உறுப்பினகர்கள் கருத்து

கொரோனா தொற்று பரவலை சரியாக கையாளவில்லை என உக்ரெய்ன் அரசாங்கம் நீக்கும் மூன்றாவது சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்டெப்பனாவ் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCE : REUTERS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்