Aran Sei

இந்தியாவில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்: 10 லட்சத்திற்கும் அதிகாமானோர் மனு – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம்

credits : londonist

ந்தியாவில் நடக்கும் விவசாய போராட்டங்கள் தொடர்பாகவும் பத்திரிகை சுதந்திரம் தொடர்பாகவும் இங்கிலாந்து நாடாளுமன்றம் விவாதிக்க இருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டங்கள்குறித்து நாம் ஏன் பேசுவதில்லையென உலக புகழ்பெற்ற பாப் இசை கலைஞரான ரிஹான்னா ட்விட்டரில் கேள்வியெழுப்பியிருந்தார். இதையடுத்து இந்தப் போராட்டம் சர்வேத அளவில் கவனத்தை ஈர்த்தது. ரிஹானாவைத் தொடர்ந்து கிரேடா துன்பெர்க், மீனா ஹாரிஸ், லிசி கங்குஜம், வனேசா நகாடே, மியா காலிஃபா எனப் பல சர்வேதச பிரபலங்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர்.

“ரிஹான்னா இஸ்லாமியரா?” – கூகுள் இணையதளத்தில் முதல் இடம் பிடித்த கேள்வி

இதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், மத்திய அரசு விவசாயத்துறையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும், சிறிய அளவிலான விவசாயிகளே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

“ரிஹான்னா பாகிஸ்தனைச் சேர்ந்த பாடகர்” – பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து

”இது போன்ற விஷயங்களில் விரைந்து கருத்து தெரிவிப்பதற்கு முன், உண்மைகளை அறிந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரச்சினைகள்குறித்து சரியான புரிதல் வேண்டும்” எனவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில், பிரபலங்கள் கூறும் கருத்துக்கள் ”துல்லியமானதாகவோ” அல்லது ”பொறுப்பானதாகவோ” இல்லை எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் போராட்டம் பற்றிய சச்சினின் ட்வீட்; எழும் விமர்சங்கள்

இந்நிலையில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில், இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்தையும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த இங்கிலாந்து அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் எனவும் இணைய வழி மனு (e-Pettition) ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவைப் பரிசீலிக்கக் கோரி 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் குறித்த பிரதமரின் உளறல் தேசத்திற்கே அவமானம் – இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்

இங்கிலாந்து நாடாளுமன்ற நடைமுறையின் படி, இணைய வழி மனுவிற்கு 10 ஆயிரம் பேர் ஆதரவளித்தால் அந்த மனு தொடர்பாக இங்கிலாந்து அரசு அறிக்கை விட வேண்டும் எனவும் 10 லட்சம் பேர் ஆதரவளித்தால். அந்த மனு தொடர்பாக விவாதம் மக்களவையில் நடத்த வேண்டும்.

விவசாயிகள் போராட்டம் – களமிறங்கிய சுற்றுச்சூழலாளர்கள் – உலக அரங்கில் கவனம் அதிகரிப்பு

எனவே, இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்தையும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மனு தொடர்பான விவாதம் நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்