Aran Sei

நீரவ் மோடியை இந்தியா அழைத்து செல்ல அனுமதி – இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அறிவிப்பு

நீரவ் மோடி - Image Credit : business-today.in

ஞ்சாப் நேஷனல் வங்கியில் 13, 500 கோடி கடன் மோசடி செய்ததாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை இந்தியா அழைத்து வர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ப்ரீத்தி பட்டேல் அனுமதியளித்துள்ளார்.

இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்கு உத்தரவு பிறப்பித்தால், நீரவ் மோடி இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவார் என சிபிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.

2019 ஆம் தேதி மார்ச் மாதம் கைது செய்யப்பட்டிருந்த நீரவ் மோடி, தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை நிராகரித்த இங்கிலாந்து நீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருக்கிறது என்றும், அவரை இந்தியாவிற்கு அனுப்பலாம் என தெரிவித்திருந்தது.

இங்கிலாந்து நீதிமன்ற உத்தரவை அடுத்து, நீரவ் மோடியை இந்தியா கொண்டு வருவது தொடர்பான அனுமதிக்காக அந்நாட்டு உள்துறை அமைச்சகத்திடம் இந்தியா அனுமதி கோரியுள்ளது.

நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் – இங்கிலாந்து நீதிமன்றம் ஒப்புதல்

இங்கிலாந்து உள்துறை அமைசகத்தின் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய நீரவ் மோடிக்கு 14 நாட்கள் அவகாசம் இருப்பதை அடுத்து அவர்மேல் முறையீடு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source : Indian Express

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்