Aran Sei

‘கொரோனா சிகிச்சைப் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை’ – யுஐடிஏஐ உத்தரவு

ருவரிடம் ஆதார் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் அவருக்கு அரசின் அத்தியாவசிய சேவைகள், பலன்கள் கிடைப்பதை ஆதார் சட்டத்தின்படி மறுக்கக் கூடாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, யுஐடிஏஐ அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், “ஒருவரிடம் ஆதார் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் அவருக்கு அரசின் அத்தியாவசிய சேவைகள், பலன்கள் கிடைப்பதை ஆதார் சட்டத்தின்படி மறுக்கக் கூடாது. மேலும், ஆதார்  அட்டை இல்லை என்பதால் ஒரு நபருக்குத் தடுப்பு மருந்து, இதர மருந்துகள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தல் போன்றவற்றை மறுக்கக் கூடாது.” என்று தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத 3 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து- மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஒருவரிடம் ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் அல்லது ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து இணையவழி ஆய்வுக்கு உட்படுத்துப்பட்டு சில காரணங்களால் கிடைக்கவில்லை என்றாலும், அந்த நபருக்குத் தேவையான சேவைகளைக் குறிப்பிட்ட துறை, ஆதார் சட்டத்தின்படி மறுக்காமல் வழங்கிட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வாறு சேவைகள் மறுக்கப்பட்டால், யுஐடிஏஐ அமைப்புக்கும், குறிப்பிட்ட துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்