Aran Sei

பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப யூ.ஜி.சி கடிதம் – உத்தரவை மதிக்க மத்திய கல்வி நிறுவனங்கள்

த்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் பாதிக்கும் அதிகமான இடங்கள் காலியாக இருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். மேலும் பட்டியலின, பழங்குடியின வகுப்பினரின் ஆசிரியர் பணியிடங்கள் 40 விழுக்காடு இடங்கள் காலியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மூன்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால், எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மேலாண்மை கல்வி (ஐ.ஐ.எம்) நிறுவனங்களில் நிலைமை கடுமையாக உள்ளது, அங்குப் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள்  60%  விழுக்காடும், பழங்குடியின வகுப்பினர் பதவிகளில் 80 விழுக்காடும் நிரப்படவில்லை. அதாவது பழங்குடியினங்களுக்கு 24 பணியிடங்களில் 5 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.

ஓரினசேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு ஆசீர்வாதம் வழங்க இயலாது – வாடிகன் தேவாலயம்

இந்திய தொழில்நுட்ப கல்வி (ஐ.ஐ.டி) நிறுவனங்களில் நிரப்பப் படாத ஆசிரியர் பணியிடங்கள் குறித்து தரவுகள் இல்லை என்றும், ஆசிரியர் அல்லாத பிற பணியிடங்கள் (non teaching staff) குறித்த தரவுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறியுள்ளார். மேலும்,  இட ஒதுக்கீடு முறையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடுவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஐ.ஐ.எம் மற்றும் ஐ.ஐ.டிக்கள் கோரியது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் உத்தம் குமாரின் கேள்விக்குப் பதிலளித்துள்ள ரமேஷ் போக்ரியால், மத்திய கல்வி பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் அளவில் அதிக காலியிடங்கள் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். 42 பல்கலைக்கழகங்களில் உள்ள பழங்குடியினர் வகுப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 709 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 500க்கு மேற்பட்ட  பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளன. ஆனால் 137 பழங்குடியின பேராசிரியர் பணியிடங்களில் 9 இடங்களில் மட்டுமே நிரப்பட்டுள்ளன. அதாவது 93 விழுக்காடு பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளன என அவர் கூறியுள்ளார்

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் 1,062 பேராசியர்களில் 1 விழுக்காடு மட்டுமே பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் என போக்ரியால் குறிப்பிட்டுள்ளார்.

26 கோடியில் பிரிட்டிஷ் பிரதமருக்கு ஊடக அறை – ” செவிலியருக்கு ஊதிய உயர்வு கொடுக்க பணமில்லை எனும் அரசின் பண விரயம் “

அதேபோலப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள உதவி பேராசிரியர்களில் 64 விழுக்காடும், பேராசிரியர்களில் 5 விழுக்காடும் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக, அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரமேஷ் போக்ரியால் எழுத்து பூர்வமாக அளித்துள்ள முதல் பதிலில், “மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர்கள் பணியில் இடஒதுக்கீடு) சட்டம், 2019ல் அமல்படுத்திய பிறகு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களில் அனைத்து மட்டங்களிலும் நிரப்பபடுகின்றன” என கூறியுள்ளார்.

” வங்கி ஊழியர் போராட்டம் விவசாயிகளின் போராட்டப் பாதையை பின்பற்றும் “- சங்கத் தலைவர் எச்சரிக்கை

அவர் அளித்துள்ள இரண்டாவது பதிலில், கல்வி மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தொடர்ந்து காலியிடங்களை கண்காணிக்கிறது. பணியிடங்களை நிரப்பக்கூடிய அதிகாரம் தன்னாட்சி நிறுவனமான யுஜிசி க்கு மட்டுமே உள்ளது. ஆனால் பல்கலைக்கழகங்கள் பணியிடங்களை நிரப்பவில்லையெனப் பழியை சுமக்கின்றன என குறிப்பிட்டார்.

ஜூன் 2019 ஆம் ஆண்டு, யு.ஜி.சி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் எழுதிய கடிதத்தில், காலியிடங்களை நிரப்ப ஆறு மாத காலக்கெடுவை வழங்கியதோடு, மீறப்பட்டால் மானியங்கள் நிறுத்தி வைக்கப்படும் என எச்சரித்துள்ளது. ஆனால், மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, தற்போது 42 பல்கலைக்கழகங்களில் 6,074 இடங்கள் காலியாக உள்ளன, அவற்றில் 75% இடஒதுக்கீடு வகைகளில் உள்ளன.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்