Aran Sei

இந்திய வரலாற்றைத் திரித்த பல்கலைக்கழக மானியக்குழு – கல்வியாளர்கள் கண்டனம்

ல்கலைக்கழக மானியக்குழு இளங்கலை வரலாற்றுத் துறைக்கு வடிவமைத்துள்ள  பாடத்திட்டம் காவிமயப்படுத்தப் பட்டுள்ளதாகக் கல்வியாளர்களும் மாணவர்களும் தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

’பொறியியல் கல்வியை காவிமயமாக்குவது முன்னேற்றமல்ல’- கமல்ஹாசனுக்கு பதிலடி

இந்து புராணங்களுக்கும் வேதங்களுக்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவம் இஸ்லாமிய வரலாறுகளுக்கு அளிக்கப்படவில்லை எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழு வரையறுத்திருக்கும் பாடத்திட்டத்திலிருந்து 20% – 30% வரை மட்டுமே பல்கலைக்கழகங்கள் அதில் திருத்தம் செய்ய இயலும். இது பல்கலைக்கழக மானியக் குழு வடிவமைக்கும் எல்லா பாடத்திட்டங்களுக்கும் பொருந்தும்.

`அருந்ததி ராய் புத்தகத்தை நீக்கியது வன்மப் போக்கின் தொடர்ச்சி’ – ஆ.ராசா கண்டனம்

இந்நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டிருக்கும் இளநிலை வரலாறு பாடத்திட்டத்தின் முதல் பருவத்தேர்வில் ‘பாரதம் குறித்த சிந்தனை”(IDEA OF BHARAT) என்ற பாடம் முழுவதும் இந்து மதம் சார்புடைய பாடங்களே பெரும்பன்மையாக இடம்பெற்றுள்ளன.

இதே போல இந்தப் பாடத்திட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் இஸ்லாமிய வரலாறுகள் புறக்கணிக்கப்பட்டு பெயரளவில் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும்   தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘விந்திய மலைகளுக்குக் கீழே இந்தியா இல்லையா?’ சு.வெங்கடேசன்

மேலும், சரஸ்வதி நதி நாகரிகம் (saraswathi valley civilization) போன்ற ஆதாரமற்ற புராண செய்திகளும் வரலாற்றோடு குழப்பி கூறப்பட்டுள்ளதாக தி வயர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது 1857 முதல் 1950 வரையான தலித் அரசியல் வரலாறு இந்தப் பாடத்திட்டத்தில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்