பதினெட்டு வயதுடையவர்கள், அதற்கும் மேற்பட்டவர்கள் மேற்பட்ட அனைவரும் இலவச தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்த பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்து அனைத்து கல்வி நிறுவனங்களும் பதாகை வைக்க வேண்டுமென பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் 20 அன்று, பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு இதுகுறித்து வாட்ஸ் ஸாப் செய்தி அனுப்பட்டுள்ளதாகவும், இந்தப் படங்களை கல்வி நிறுவனத்தின் சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டுமென யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பியுள்ள செய்தியில், “ஒன்றிய தகவல் தொழிற்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ள பதாகையின் வடிவமைப்பு மற்றும் ஹிந்தி, ஆங்கில மொழியிலான பதாகைகள் போன்றவை உங்களது பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பதாகையில் பிரதமர் மோடியின் படத்துடன் “பிரதமர் மோடிக்கு நன்றி” என்ற வாசகம் இடம் பெறுமென்றும் அந்த செய்தியில் கூறியுள்ளது.
#FreeVaccinationForAll
Strengthen the fight against #Corona
Get Vaccinated… pic.twitter.com/XkN4ZqvRPC— University of Delhi (@UnivofDelhi) June 22, 2021
இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், போபாலில் உள்ள எல்.என்.சி.டி பல்கலைக்கழகம், பென்னட் பல்கலைக்கழகம், குர்கானில் உள்ள நார்த்கேப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் “பிரதமர் மோடிக்கு நன்றி” என்ற ஹேஷ்டேக்குடன் பதாகைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு கொரோனா இலவச தடுப்பு மருந்து: டெல்லி அரசு திட்டம்
இதனைத்தொடர்ந்து, பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்த அறிவிப்புக்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம்குறித்து தெரிவித்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க துணைத் தலைவர் சாகேத் மூன், “அரசு இந்தச் சூழலை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கிறது, இது சரியானதல்ல” என்று தெரிவித்துள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.