Aran Sei

தமிழகத் தேர்தல் முடிவு: ஸ்டாலினின் வெற்றிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையைப் பரிசளித்த உதயநிதி

மிழக சட்டபேரவை தேர்தல் பரப்பரையின்போது, அம்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலை ஆதரித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, கையில் ‘எய்ம்ஸ்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த செங்கலை தூக்கிக்காட்டி, “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மோடி மூன்று வருடத்திற்கு முன்பு செங்கல் நட்டுவைத்து சென்றார். நான் அந்தச் செங்கலை எடுத்து வந்திருக்கிறேன். கடந்த 10 நாட்களாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் காணவில்லை என தேடிக் கொண்டிருக்கிறார்கள். 6 ஆம் தேதிவரை எய்ம்ஸ் மருத்துவமனை எனது கட்டுப்பாட்டில்தான் தான் இருக்கும். 7 ஆம் தேதி மருத்துவமனையைக் கொடுத்து விடுகிறேன்.” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ – உதயநிதி ஸ்டாலின் உறுதி

இது சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. அடுத்து சில பரப்புரைகளில், அந்தச் செங்கற்கல்லை எடுத்துச் சென்றிருந்தார்.

இந்நிலையில், இன்று (மே 2) தனது டிவிட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ‘எய்ம்ஸ்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்தச் செங்கற்கல்லை, திமுக தலைவரும் தனது தந்தையுமான ஸ்டாலினிடம் ஒப்படைக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். உடன் அவரின் மகன் உட்பட குடும்பத்தில் உள்ள சிறுவர்கள் இருந்தனர்.

திமுக சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்