Aran Sei

‘அதிகாரப் பசியால் எனது உறவினர்களையும் கட்சியினரையும் பாஜக குறி வைக்கிறது’ – உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

ணமோசடி வழக்கில் தனது உறவினருக்கு எதிரான அமலாக்கத்துறையின் நடவடிக்கை குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது மவுனத்தை கலைத்து, பாஜகவை விமர்சித்துள்ளார்.

பாஜக அதிகாரக பசியுடன் இருப்பதாகவும், அதனால் தனது அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதோடு, தனது உறவினர்கள் மற்றும் சிவசேனா கட்சியினரை பாஜக குறிவைத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“அவர்கள் (பாஜக) ஆட்சி செய்ய விரும்பினால், அதை வழங்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் முதலில், அவர்கள் என்மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபித்து, என்னை சிறையில் அடைக்க வேண்டும். நீங்கள் இப்போது செய்யும் செயல்களுக்காகவோ, என் குடும்ப உறுப்பினர்களை அவதூறு செய்வதற்காகவோ, அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்காகவோ நான் பயப்படவில்லை” என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

ஒன்றிய விசாரணை அமைப்புகளை வைத்து மகாராஷ்ட்ராவின் குரலை பாஜகவால் ஒடுக்க முடியாது – சஞ்சய் ராவத்

“பாஜக எங்களுடன் சண்டையிட விரும்பினால், நேரடியாக வந்து சண்டையிடட்டும். மாறாக, விசாரணை அமைப்புகளை வைத்து எங்களின் குடும்பங்களை குறிவைக்க வேண்டாம். இது வீரம் அல்ல. நாங்கள் யாருடைய குடும்ப உறுப்பினர்களையும் குறிவைத்ததில்லை. உங்கள் குடும்பத்தின் பிரச்சினைகளை நாங்கள் ஒருபோதும் பொதுவெளிக்கு கொண்டுவந்ததில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இராமாயணத்தைப் பற்றிக் குறிப்பிட்டு பேசியுள்ள உத்தவ் தாக்கரே, “இராவணனின் உயிர் எப்படி அவரது நாபியில் (தொப்புள்) இருக்கிறதோ, அதேபோல, பாஜகவுக்கு தான் ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தாலும் அதன் உயிரானது மும்பையிலேயே உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்தவ் தாக்ரே உறவினரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை – அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சிவ சேனா குற்றச்சாட்டு

“இந்திரா காந்தி அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சியை அமல்படுத்தினார். ஆனால், இன்று நம் நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியே உள்ளது. எதிர்க்கட்சிகளை குறிவைக்க ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. விசாரணை அமைப்புகள் வீட்டு வேலையாட்களாக ஆகிவிட்டன. பாஜக தலைவர்கள் முதலில் ஒரு குற்றச்சாட்டை சொல்கிறார்கள். அடுத்து, அமலாக்கத்துறை அதற்கான வேலையில் இறங்குகிறது” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“நாங்கள் பாஜகவுடன் ஆட்சியைப் பகிர்ந்து கொள்ளவில்லை. அதனாலேயே நாங்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்படுகிறோம். நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது, ​​யாரும் எந்த பிரச்சனையையும் எழுப்பவில்லை. எங்கள் குடும்பத்தையும் யாரும் குறிவைக்கவில்லை” என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்