கொரோனா பெருந்தொற்றை தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அப்போதுதான் மாநில பேரிடர் நிதியை, இக்கட்டான இந்தக் கொரோனா சூழலில் மக்களுக்கு உபயோகப்படுத்த முடியும் என்று மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
இன்று (ஏப்ரல் 15), இது தொடர்பாக பேசிய மாநில அரசின் அதிகாரி ஒருவர், “மத்திய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ்தான் அனைத்து மாநில பேரிடர் மேலாண்மை சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. ஆகவே, தற்போது கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மாநில பேரிடர் நிதியைப் பயன்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் அனுமதி தேவைப்படுகிறது. அதன் பொருட்டே அனுமதி கோரி, மத்திய அரசிற்கு மகாராஷ்ட்ர முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஊரடங்கு – சொந்த ஊர்களுக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்
நேற்று (ஏப்ரல் 14) ஒரு நாள் மட்டும், புதிதாக 58,952 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதன் வழியாக, மொத்தமாக, 35 லட்சத்திற்கும் அதிகமான தொற்று எண்ணிக்கையைக் கொண்ட மாநிலமாக மகாராஷ்ட்ரா உள்ளது. இறப்பு எண்ணிக்கை 58,804 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று (ஏப்ரல் 14) முதல் மே 1 ஆம் தேதிவரை முழு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.