Aran Sei

உதய்பூர் வன்முறை: ‘தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும்’: ஓவைசி வலியுறுத்தல்

நாட்டில் நடக்கும் ஒவ்வொரு வன்முறையும் கண்டிக்கப்பட வேண்டும் என்றும்  தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

ராஞ்சி கலவரம்: துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பானவர்கள் நடத்திய விசாரணையை ஏற்க முடியாது என உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் குற்றச்சாட்டு.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில், நபிகள் நாயகம் குறித்து பாஜக-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா கூறிய கருத்தை ஆதரித்து ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டதாக, நேற்று டெய்லர் ஒருவரை இரண்டு பேர் தலை துண்டித்துக் கொலை செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட கவுஸ் முகமது, ரியாஸ் முகமது ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மனித உரிமை செயல்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட், பத்திரிகையாளர் ஜூபைர் கைது – நோபர் பரிசு பெற்ற பத்திரிகையாளர் மரியா ரேசா கண்டனம்

இந்த நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி, நாட்டில் இது போன்ற தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய ஒவைசி,  “உதய்பூரில் அந்த ஏழை டெய்லருக்கு நடந்ததை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஆனால், அதேசமயம் சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் நடந்த எல்லாவற்றையும் கண்டிக்க வேண்டும். தீவிரவாதம் இங்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதன் காரணமாகத்தான் நான், நாட்டில் நடக்கும் தீவிரமயமாக்கலைக் கண்காணிக்க, தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு, குறிப்பிட்ட மதத்துக்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு மதத்துக்கும் இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உதய்பூர் படுகொலை: மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது – ராகுல் காந்தி கண்டனம்

இவர்கள் செய்தது மிகக் கொடூரமான செயல். நிச்சயமாக இது சந்தேகத்துக்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, முட்டாள்தனமான, காட்டுமிராண்டித்தனமான செயல்களைச் செய்ய யாருக்கும் உரிமை இல்லை” எனக் கூறியுள்ளார்.

மேலும், ”சாதி, மதம், அரசியல் அல்லது வேறு எதுவாக இருந்தாலும் யாரேனும் வன்முறை நிகழ்த்தினால் கண்டிக்கப்பட வேண்டும். மேலும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் சட்டம் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இதற்குத்தான் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்ட வேண்டும் என்று கோரிவருகிறோம்” என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

Source: ndtv

கதறும் தினமலர் | உளறும் அண்ணாமலை, சீமான் | Manushyaputhiran Interview

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்