உதய்பூரில் தையல்காரர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்ப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் பாஜக உறுப்பினர் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இந்த காரணத்திற்காகத்தான் வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு ஒன்றிய அரசு மாற்றியதா என்று கேள்வி எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் பவன் கேரா, உதய்பூர் சம்பவத்தில் தொடர்புடைய ரியாஸ் அட்டாரிக்கும் பாஜகவுக்கும் தொடர்பிருப்பதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
“கண்ணையா லாலில் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ரியாஸ் அட்டாரி பாஜகவைச் சேர்ந்தவர்” என்று தன்னுடைய ட்விடர் பக்கத்தில் பவன் கேரா பதிந்துள்ளார்.
देखिए कैसे फ़ेस्बुक पर भाजपा नेता मोहम्मद ताहिर सरेआम आतंकी रियाज़ अटारी को भाजपा का कार्यकर्ता बता रहे हैं। pic.twitter.com/QjblPfWJIm
— Pawan Khera 🇮🇳 (@Pawankhera) July 2, 2022
ரியாஸ் அட்டாரியை பாஜகவோடு தொடர்பு படுத்தும் செய்தி போலியானது என்று பாஜகவின் தகவல் தொழிற்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பத்திரிகை செய்தியின் படி, உதய்பூர் கொலையில் குற்றஞ்சாட்டபட்ட ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக ராஜஸ்தான் மாநில பாஜகவின் சிறுபான்மை பிரிவில் சேருவதற்கு முயன்றுள்ளனர் என்று இந்தியா டுடே வழியாக தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவில் புனித யாத்திரை முடிந்து திரும்பிய பின்னர் அவரை உதய்பூர் கொலையில் கொலையில் குற்றஞ்சாட்டபட்ட ஒருவரான ரியாஸ் அட்டாரியை ராஜஸ்தானில் உள்ள பாஜகவின் சிறுபான்மை பிரிவின் உறுப்பினரான இர்ஷாத் செயின்வாலா வரவேற்கும் புகைப்படங்கள் கிடைத்துள்ளதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
உதய்பூரில் நடந்த பாஜக நிகழ்ச்சிகளில் ரியாஸ் அட்டாரி கலந்து கொண்டார் என்பதை அவர் ஒப்புக்கொண்டாதாக இந்தியா டுடே கூறியுள்ளது.
மோடி, அமித்ஷா, ஆர்எஸ்எஸ், பாஜகவினர் நாட்டில் வெறுப்பை விதைக்கின்றனர் – ராகுல்காந்தி விமர்சனம்
பாஜக தலைவர்களான இர்ஷாத் செயின்வாலா மற்றும் முகமது தாஹிர் ஆகியோருடன் அட்டாரி இணைந்திருக்கு படங்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் பவன் கேரா.
“குற்றம் சாட்டப்பட்ட ரியாஸ் அட்டாரியும் ராஜஸ்தான் பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான குலாப்சந்த் கட்டாரியாவின் நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்றார் என்பது இந்தியா டுடே வழியாக அம்பலமாகியுள்ளது” என்று காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் பவன் கேரா குற்றம் சாட்டியுள்ளார்.
Source: newindianexpress
வன்மத்த கக்குறது, கலவரத்த தூண்டுறது… வேலை சோலியே கிடையாதா? | Vikraman VCK | Nupur Sharma
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.