Aran Sei

கியூபாவில் நிலவும் தட்டுப்பாட்டுக்கு அமெரிக்காவின் தடையே காரணம் – நாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு எதிராக சமூக எழுச்சியை  உண்டாக்க அதிபர் அழைப்பு

கியூபா அதிபர் தியாஸ் காணல் புரட்சியாளர்கள் தங்கள் ஆதரவை அரசாங்கத்திற்கு  தெரிவிக்க  வேண்டுமெனவும், அரசியல் ஸ்திரமின்மையை உறுதிப்படுத்தும் வகையில் தலையிட்டை நிராகரிக்க வேண்டுமெனவும்  கோரியுள்ளதாக ரெட் பிஷ் இணையதளம் செய்தி  வெளியிட்டுள்ளது.

மேலும், நாட்டை சீர்குலைக்க நினைக்கும் வெளிநாட்டின் முயற்சிகளுக்கு எதிராக சமூக எழுச்சியை  உண்டாக்குங்கள் என்றும்  அவர் கூறியுள்ளதாக  அந்த செய்தி  கூறுகிறது.

சட்டவிரோதமாக நீர் நிலையை தனியாருக்கு தாரைவார்க்கும் சி.எம்.டி.ஏ – உடனடியாக கைவிட பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்

இந்நிலையில், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில்  மின்சார பற்றாக்குறை எற்பட்டுள்ளதற்கு எதிராக  போராடிய போராட்டக்காரர்களுக்கு  எதிராக , அந்நாட்டின் ஹவானா நகர வீதிகளில் புரட்சியாளர்கள்  போராடும்  படங்கள்  வெளியாகியுள்ளதாகவும்  ரெட் பிஷ் செய்தியில்  கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தட்டுபாட்டிற்குக்  60 ஆண்டுகள் பழமையான அமெரிக்காவின் தடையே காரணம்  என  கியூபா அரசாங்கம் கண்டறிந்துள்ளதாகவும்  அந்தச் செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்பின கால்பந்து வீரர்களுக்கு எதிரான நிறவெறியூட்டும் பதிவுகள் : வெட்கக்கேடான செயல் என இங்கிலாந்து பிரதமர் கண்டனம்

இந்த தடை குறித்து தெரிவித்துள்ள கியூபா அதிபர்,”யார் அமெரிக்காவின் இந்தத் தடையை  ஒருபோதும்  தடுக்கவில்லையோ,  அவர்கள் தான் கொரோனாவை கியூபா அரசு கட்டுபடுத்த தவறிவிட்டது  என்ற கருத்துக்கு ஆதரவாக  போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்”  என்று  தெரிவித்துள்ளதாகவும்  ரெட் பிஷ் செய்தியில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக , மின்சாரம்,உணவு,மருந்துகள் ஆகியவை பற்றாக்குறை மற்றும்  கொரோனா தொற்று அதிகரிப்பு  என்று கூறி  கியூபாவின்  எண்ணற்ற நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில்  ஈடுபட்டதாகவும், சிலர் சர்வாதிகார ஆட்சி  முற்றுப்பெறட்டும்  என்று முழக்கமிட்டதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்