Aran Sei

சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய எரிமலை – ‘அமல்’ விண்கலத்தின் முதல் படம் வெளியீடு

ரபுலகின் முதல் வேற்று கிரக பயண வெற்றியின் வெளிப்பாடாக, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), செவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அரபு மொழியில் ‘அமல்’ (நம்பிக்கை) என்று அழைக்கப்படும், ஐக்கிய அரபு மீரகத்தின் விண்கலம், இரண்டு தினங்களுக்கு முன் செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக பயணிக்கத் தொடங்கியது.

அமல் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவு செய்யப்பட்ட செவ்வாய் கிரகத்தின் புகைப்படத்தை, ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்வெளி ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமையன்று (14.02.21) வெளியிட்டுள்ளது.

செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்த விண்கலம் – வரலாறுபடைத்த ஐக்கிய அரபு அமீரகம்

செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து, 24,700 கி.மீ தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட அந்த புகைப்படம், நம்முடைய சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய எரிமலையை அழகாக படம் பிடித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகம்மது பின் ரஷீத்  அல்-மக்தூம் தனது டிவிட்டர் பக்கத்தில் செவ்வாய் கிரகத்தை படத்தை பகிரிந்ததுடன் “வரவலாற்றில் அரபுலகின் முதல் விண்கலம் எடுத்துள்ள, செவ்வாயின் முதல் புகைப்படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாயின் கலநிலை குறித்து ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அனுப்பப்பட்ட அமல் விண்கல திட்டத்தின் வெற்றி, அரபுலக இளையதலைமுறையினரிடையே நம்பிகையை துளிர்க்கச் செய்துள்ளது.

மூன்று ஆய்வு உபகரணங்களை சுமந்து சென்றுள்ள அமல் விண்கலம், செவ்வாயின் ஓராண்டான, பூமியின் 687 நாட்கள் அந்த கிரகத்தை சுற்றி வலம் வரவுள்ளது.

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி செவ்வாய் கிரகம் தொடர்பான பல முக்கிய தவல்களை அமல் விண்கலம் பூமிக்கு அனுப்பும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source: AP

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்