Aran Sei

ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்கள் – அமெரிக்க துணை பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை

Credit: The Hindu

ஷ்யாவின் மத்திய வங்கிமூலம் உள்ளூர் நாணயத்தில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சர்வதேச பொருளாதாரத்திற்கான அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் துலீப் சிங் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையைச் சீர்குலைக்க அல்லது மீறும் முயற்சியாக உள்ளூர் நாணய பரிவர்த்தனை முறையை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.

அருணாச்சலப் பிரதேசம்: மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீட்டித்த ஒன்றிய அரசு

சீனாவின் இளைய கூட்டாளி என்பதால், சீனாவுடனான இந்தியாவின் எல்லை பிரச்னையின்போது ரஷ்யா உதவும் என்று இந்தியா எதிர்பார்க்க கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

”நாங்கள் (அமெரிக்கா) விதித்துள்ள தடைகளின் வழிமுறைகள், எங்களுடன் சேருவதன் முக்கியத்துவம், பகிரப்பட்ட தீர்மானத்தின் நலன்களை முன்னெடுத்துச் செல்லவும் நட்பு மனப்பான்மையுடன் நான் இந்தியா வந்துள்ளேன்” என அவர் கூறியுள்ளார்.

”டாலர் அடிப்படையிலான வர்த்தக முறையை மட்டுப்படுத்தி, ரஷ்யாவின் ரூபிளை பயன்படுத்தும் முறையை ஊக்குவிக்க கூடாது என்பதில் அனைத்து நாடுகளும் குறிப்பாக எங்களின் (அமெரிக்காவின்) நட்பு நாடுகள் தீவிரமாக உள்ளோம்” என துலீப் சிங் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் வகுப்புவாத சம்பவங்களால் மாநிலத்தின் மதிப்பு குறைகிறது – பயோகான் நிறுவனர் கிரண் மசூம்தார்- ஷா கவலை

”சீனாவுடனான இந்த உறவில் ரஷ்யா இளைய பங்காளியை போல செயல்படுகிறது. ரஷ்யாவை விட சீனா எந்த அளவிற்கு செல்வாக்கை பெறுகிறதோ அந்த அளவிற்கு அது இந்தியாவிற்கு பாதகமாக அமையும். சீன ராணுவம் மீண்டும் ஒரு முறை இந்திய எல்லைக்கு ஊடுருவினால், இந்தியாவிற்கு உதவ ரஷ்யா வரும் என்று யாரும் நம்ப மாட்டார்கள்” என அவர் கூறியுள்ளார்.

மேலும், அவர் குறிப்பட்ட விளைவுகள் எந்த மாதிரியானவை என்பது குறித்து கருத்து தெரிவிக்க துலீப் சிங்  மறுத்துவிட்டார்.

Source: The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்