Aran Sei

’உ.பி. பெண்கள் நள்ளிரவில் நகை அணிந்து செல்லலாம் எனும் அமித் ஷாவின் கருத்து ஏமாற்று வேலை’ – பிரியங்கா காந்தி சாடல்

த்தரபிரதேசத்தில் 16 வயது சிறுமி நகை அணிந்து கொண்டு நள்ளிரவில் சாலைகளில் என்றும், மாநில நிலைமை எப்படி இருக்கிறதென்று பெண்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் ஒன்றியஉள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்து ‘ஏமாற்று வேலை (ஜூம்லா) என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சனிக்கிழமை கூறியுள்ளார்.

கான்பூரில் 3 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக ஊடக  செய்தியை பிரியங்கா காந்தி தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் .

“நாட்டின் உள்துறை அமைச்சர் நகைகளை அணிந்துகொண்டு நல்லிரவு செல்ல்லாம் என்கிறார். ஆனால் உத்தர பிரதேச பெண்களுக்கு மட்டுமே தெரியும்;அவர்கள் ஒவ்வொரு நாளும் என்ன மாதிரியான விஷயங்களைச் சமாளிக்க வேண்டும் என்று தெரியும்” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர்  பிரியங்கா காந்தி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்