Aran Sei

திரிபுரா வன்முறை குறித்து ட்வீட் செய்த பெண் பத்திரிகையாளர்கள் கைது: பத்திரிகையாசிரியர்கள் சங்கம் கண்டனம்

திரிபுராவில் சமீபத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து எழுதியதால், அசாம் காவல்துறையினரால் காவலில் வைக்கப்பட்ட இரண்டு பெண் பத்திரிகையாளர்களை திரிபுரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று(நவம்பர் 14), திரிபுராவில் உள்ள ஃபாடிக்ராய் காவல் நிலையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) ஆதரவாளர் அளித்த புகாரின் பேரில், எச் டபிள்யூ செய்தி நிறுவனத்தின் பத்திரிக்கையாளர்களான சம்ரித்தி சகுனியா மற்றும் ஸ்வர்ணா ஜா ​​ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று(நவம்பர் 15), இக்கைது நடைபெற்றுள்ளதாக அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘திரிபுரா வன்முறையை பதிவு செய்த 102 பேர் மீது வழக்கு’ – இந்தியப் பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்

இதுதொடர்பாக, இன்று(நவம்பர் 15), தனது டிவிட்டர் பக்கத்தில் எச் டபிள்யூ செய்தி நிறுவனம், “பயணத்தடை விதிக்கப்பட்டு ரிமாண்ட்டில் இருந்த எங்கள் நிருபர்களான திருமதி சம்ரித்தி சகுனியா மற்றும் திருமதி ஸ்வர்ணா ஜா ​​ஆகியோர் இன்று 12:55 மணியளவில் அசாமின் கரீம்கஞ்சில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் திரிபுராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்கள் உதய்பூர் மாவட்ட நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள்” என்று கூறியுள்ளது.

“எச்டபிள்யூ செய்தி நிறுவனத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் பிஜூஷ் பிஸ்வாஸ் அவர்களுக்காக நேரில் ஆஜராக உள்ளார். எங்கள் பத்திரிகையாளர்களை உடனடியாக பிணையில் விடுதலை செய்ய நாங்கள் அழுத்தம் கொடுத்து வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘திரிபுராவில் இந்துத்துவவாதிகளால் தாக்கப்படும் இடதுசாரிகள், இஸ்லாமியர்கள்’ – நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் அறிவித்த திருமாவளவன்

திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் ஒரு மசூதி எரிக்கப்பட்டதாகவும், குரான் நகல் சேதப்படுத்தப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் இரு பத்திரிகையாளர்களும் தங்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டதாக அகர்தலா மாவட்ட மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர்கள் பதிவேற்றிய காணொளிகள் போலியானவை என திரிபுரா காவல்துறை சந்தேகிப்பதாக கூறியுள்ளார்.
நவம்பர் 11 ஆம் தேதி, சம்ரித்தி சகுனியா எழுதிய ட்வீட்டில், “#திரிபுராவன்முறை தர்கா பஜார்: அக்டோபர் 19 ஆம் தேதி அதிகாலை 2:30 மணியளவில், தர்கா பஜார் பகுதியில் உள்ள மசூதியை அடையாளம் தெரியாத சிலர் எரித்துள்ளனர்” என்று கூறியிருந்தார்.

திரிபுரா காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சகுனியாவின் பதிவுகள் உண்மையல்ல என்றும், இரு சமூகங்களுக்கு இடையே வெறுப்பு உணர்வை ஊக்குவிக்கிறது என்றும் கூறியுள்ளது.

திரிபுரா: வன்முறையில் முடிந்த விஷ்வ இந்து பரிஷத் பேரணி- கொளுத்தப்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகள்

பத்திரிகையாளர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு இந்தியா பத்திரிகையாசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் கோரியுள்ளது.

வங்கதேசத்தில் நடந்த வன்முறைக்கு எதிராக அக்டோபர் 26 அன்று, திரிபுராவில் உள்ள சாம்தில்லாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய பேரணியின் போது ஒரு மசூதி தாக்கப்பட்டதுடன், இரண்டு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. அருகிலுள்ள ரோவா பஜாரில் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் மூன்று வீடுகளும் சில கடைகளும் சூறையாடப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

Source: PTI, New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்