Aran Sei

பாஜக ஆளும் ஹரியானாவில் விவசாயிகள் மீது தேசத்துரோக வழக்கு – எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பேரணி

ஹரியானா மாநிலத்தைச் சார்ந்த இரண்டு விவசாயிகள் மீது தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

மேலும், வேளாண் சட்டதிற்கெதிரென விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கொண்ட 136 விவசாயிகள் மீதும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ்  மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அனில் விஜ் தகவலின் படி,  போராடிய விவசாயிகள் ஹரியானா சட்டசபையின்  துணை அவைத்தலைவருடைய கன்வீனரின்  வாகனம் தாக்கப்பட்டது சம்பவம் குறித்தும்,  போராடிவரும் விவசாயிகளின் மீது அரசு கவனம் கொள்ளவில்லை என்றால் பீரங்கியால் அரசைத் தாக்குவேன் எனக் கூறிய விவசாயி மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அனில் விஜ்  தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அம்மாநிலத்தில் விவசாயிகள்மீதான கொடுமைகள், அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் மற்றும் மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் சிக்கல்கள் குறித்து  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் சட்டசபைக்கு பேரணியாக சென்றனர்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்