Aran Sei

2021 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு – இரண்டு பத்திரிகையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது

2021 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ் பத்திரிக்கையாளர் மரியா ரெசா, ரஷ்ய பத்திரிக்கையாளர் டிமிட்ரி முராட்டோ ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டவுள்ளது.

பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்யாவில் அமைதி, ஜனநாயகம், கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையில் செயல்பட்டதற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்கொல்லி புலியும் அரசு செய்ய வேண்டியவையும் – சந்துரு மாயவன்

முதலாம் உலகப் போருக்கு பிறகான ஜெர்மனியின் ரகசிய ஆயுதமாக்கல் திட்டம்குறித்து அம்பலப்படுத்திய அந்நாட்டின் பத்திரிக்கையாளர் கார்ல் வான் ஒசீட்ஸ்கிக்கு 1935 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட பிறகு மீண்டும் இந்த ஆண்டு பத்திரிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிலிப்பைனஸைத் தளமாகக் கொண்ட ராப்ளர் என்ற சுயாதீன செய்தி வலைதளத்தின் இணை நிறுவனராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் மரியா ரெசா உள்ளார்.

காஷ்மீர் சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்ற கார் – காரில் வந்தவரைச் சுட்டுக் கொன்ற சிஆர்பிஎஃப் ஊழியர்கள்

ரோட்ரிகோ டுடெர்டே அரசாங்கத்தின் செயல்பாடுகள், அதன் சர்ச்சைக்குரிய மற்றும் வன்முறையான ‘போதைப்பொருள் மீதான போர்’ ஆகியவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.

ரஷ்ய செய்தித்தாளான நோவாயா கசேட்டாவின் தலைமை ஆசிரியராக 1995 முதல் 2017 ஆம் ஆண்டுவரை டிமிட்ரி முராட்டோ பதவி வகித்துள்ளார்.

”ரஷ்யாவில் இன்று தேசிய அளவில் செல்வாக்கு மிக்க ஒரே உண்மையான விமர்சன செய்தித்தாள் நோவயா கெஜெட்டா” என பத்திரிக்கையாளர்களை பாதுகாக்கும் குழு (சிபிஜெ) தெரிவித்துள்ளது.

கௌஹாத்தி விமான நிலையம் அதானியிடம் ஒப்படைப்பு – முறைகேடு புகாருக்கு இடையிலும் ஒன்றிய அரசு நடவடிக்கை

சுயாதீன அறிக்கைகளை ஒரங்கட்டுவதில் அரசு வெற்றி கண்ட போதிலும், தனித்துவமான சமரசமற்ற தலையங்கத்தை தொடர்ந்து எழுதி கணிசமான செல்வாக்கை மக்களிடம் செலுத்தி நோவயா கெஜெட்டா பயணித்து வருகிறது” என சிபிஜெ குறிப்பிட்டுள்ளது.

Source : Reuters

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்