Aran Sei

வாக்காளர்களுக்கு கொடுப்பதாக இருந்த ஜிலேபி, சமோசாக்கள் பறிமுதல்: தேர்தல் நடத்தை விதியை மீறியதாக 10 பேர் கைது

த்தரபிரதேசத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக சமைக்கப்பட்ட இருநூறு கிலோ ஜலேபி மற்றும் 1,050 சமோசாக்களை உன்னாவ் மாவட்ட காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

“கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளையும் தேர்தல் நடத்தை விதிகளையும் மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

‘தேர்தல் நடத்தை விதியை மோடி நடத்தை விதியென்று மாற்றுங்கள்’: தேர்தல் ஆணையத்தை பகடி செய்த மம்தா பானர்ஜி

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில், வேட்பாளர் ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தி, எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் உட்பட மாவு, நெய் போன்ற ஜிலேபி, சமோசா தயாரிப்பிற்கு பயன்படுத்திய பிற பொருட்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இறுதி கட்ட தேர்தல் ஏப்ரல் 29 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

Source : ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்