Aran Sei

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை ஆற்றில் வீசிய இருவர் கைது – இணையத்தில் பரவிய காணொளியில் பரபரப்பு

த்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை ஆற்றில் வீசிய அவரது உறவினர்கள் இருவரை காவல்துறை கைது செய்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பல்ராம்பூர் மாவட்டத்தைச் சார்ந்த இருவர் அங்குள்ள கங்கையாற்றின் பாலத்திலிருந்து, கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட அவர்களது உறவினரின் உடலை ஆற்றில் வீசுவதை, அவ்வழியே சென்ற ஓருவர் காணொளியாக எடுத்து வெளியிட்டதற்கு பின்னர் இந்த சம்பவம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

‘கொரோனா நோயாளிகளின் சடலங்கள் கொட்டப்பட்டதால் கங்கை நீர் அசுத்தமாகவில்லை’ – ஒன்றிய அரசு தகவல்

இந்நிலையில் அவர்கள் இருவர் மீதும் கொரோனா நடைமுறைகளை மீறியதின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் அரவிந்த் மிஸ்ரா தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘கங்கையில் சடங்களை விடும் பழக்கம் உ.பியில் உள்ளது’ – நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஒன்றிய அரசுக்கு உ.பி பதில்

கங்கையாற்றில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள் மிதந்ததையடுத்து அம்மாநில அரசின் மீது கடுமையான விமர்சனம் எழுந்ததற்கு பின்னர் மாநில அரசு நடவடிக்கையைத் துரிதப்படுத்தியுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்