Aran Sei

உத்தரபிரதேசம் உன்னாவில் மீண்டும் பயங்கரம் – 2 தலித் சிறுமிகள் சடலமாக மீட்பு; ஒருவர் கவலைக்கிடம்

த்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரத்தில், 13 மற்றும் 16 வயதுடைய இரண்டு தலித் சிறுமிகளின் உடல்கள் வயலில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களுடன், 17 வயது சிறுமி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

சகோதரிகளான உயிரிழந்த இரு சிறுமிகளும் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றிக் கொலை செய்யப்பட்டிருக்கலாமென்று சந்தேகிப்பதாக கூறும் உத்தரபிரதேச காவல்துறையினர், சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில், மறுப்பு தெரிவித்து போராடியதற்கான அறிகுறிகளோ, சிறுமியின் உடலில் காயங்களோ இல்லை என்று குறிப்பிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் இனி உரக்க பேசுவார்கள்” – பிரியா ரமணி

சிறுமிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டபோது, கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்ததாக அவர்களின் சகோதரர் குறிப்பிட்டுள்ளதாகவும், 17 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுமியின் சகோதரர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இன்று, அவர்கள் புல் சேகரிக்க வயலுக்கு சென்றிருந்தார்கள். திரும்பி வர தாமதமானதால், நாங்கள் அவர்களைத் தேடிச் சென்றோம். அங்கே அவர்கள் ஆடைகளால் கை, கால்கள் கட்டப்பட்டு நிலையில் கிடந்தார்கள்.” என்று கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவித்துள்ளது.

தொழிலாளர், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தலித் இளம் பெண் – காவல் நிலையத்தில் சித்திரவதை

லக்னோ காவல்துறை ஆய்வாளர் லக்ஷ்மி சிங், “சிறுமிகள் கட்டப்பட்டிருந்தார்களா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சிறுமியின் சகோதரர் அப்படி கூறுகிறார். காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்னரே, உடல்கள் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்ததால் நாங்கள் எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியாது.” என்று கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

உன்னாவ் நகர காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்ராவ் குல்கர்னி கூறுகையில், “அசோஹா காவல் நிலைய எல்லைக்குள், மூன்று சிறுமிகள் தங்கள் சொந்த வயலில் மயக்கமான நிலையில் கண்டெடுக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் கால்நடைகளுக்கான தீவனத்தை எடுக்க சென்றிருந்தார்கள் என்றும் பின்னர், சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களைத் தேடிச் சென்றபோது, ​​அவர்கள் வயலில் கிடந்ததைக் கண்டுள்ளார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. அவர்களின் வாயிலிருந்து வெள்ளை நிற திரவம் போன்ற ஒன்று வெளியே வந்தபடி இருந்திருக்கிறது. இது விஷமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.” என்று குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் பெண்களின் தற்கொலை அதிகரிப்பு – உலக பொருளாதார நெருக்கடியே காரணம்?

மேலும், “இச்சம்வத்தோடு தொடர்புடைய அனைவரின் தகவல்களையும்  நாங்கள் பதிவு செய்து வருகிறோம். இதுகுறித்து, ஆழமான விசாரணை நடத்தப்படுகிறது. தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது.” என்றும் சுரேஷ்ராவ் குல்கர்னி கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்