Aran Sei

‘கோமியமும் சாணமுமல்ல அறிவியலே கொரோனாவை குணப்படுத்தும்’ – சமூக வலைதளப் பதிவிற்கு இருவர் கைது

கொரோனா தொற்றால் மரணமடைந்த மணிப்பூர் பாஜக தலைவர் தொடர்பாக சமூக வலைதளத்தில் எழுதியதற்காக பத்திரிகையாளர் மற்றும் அரசியல் ஆர்வலர் இருவரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, மணிப்பூர் மாநில பாஜகவின் துணைத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் புகார் அளித்ததை தொடர்ந்து, அம்மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோரேச்சந்திர வாங்கேம் மற்றும் அரசியல் ஆர்வலர் எரேந்திரோ லெய்கொம்பம் ஆகியோரை அவர்களது வீடுகளில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொரோனோவால் உயிரிழந்த மாநில பாஜக தலைவர் சாய்கோம் திகேந்திர சிங்கை இருவரும் அவமானப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாட்டுச் சாணம் கொரோனாவை குணப்படுத்தாது; வேறு நோயைத்தான் உண்டாக்கும் – மருத்துவர்கள் தகவல்

திகேந்திர சிங் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் எழுதி பதிவில் இருவரும்,  “சந்தியடையுங்கள் ஜி, மாட்டுச் சாணமும் கோமியமும் கொரோனாவை குணப்படுத்தாது. அறிவியலும் அடிப்படை அறிவுமே கொரோனாவை குணப்படுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு முன்னரே, தனது சமூக வலைதள பதிவிற்காக, இரண்டு வெவ்வேறு வழக்குகளில் இரண்டு முறை பத்திரிகையாளர் வாங்க்கேம் கைது செய்யப்பட்டார். மணிப்பூரில் பாஜக தலைமையிலான அரசானது, அவருக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தேச விரோத குற்றச்சாட்டுகளைப் பதிந்துள்ளது.

Source; the wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்