Aran Sei

அமித் ஷா பேசியதன் எதிரொலி – ட்விட்டரில் ட்ரெண்டாகும் #இந்தி_தெரியாது_போடா

ந்தி அல்லாத மொழிகளைப் பேசும் மாநிலங்கள் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருந்த நிலையில், ‘#இந்தி_தெரியாது_போடா’, ‘#இந்தி_வேண்டாம்_போடா’ ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்தி அல்லாத பிற மொழிகளைப் பேசும் இந்திய மாநிலங்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும் போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.

அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

மேலும், இது இந்தியாவின் பன்மைத்துவத்தின் மீதான தாக்குதல் என்றும், இந்த இந்தி ஏகாதிபத்தியத்தை திணிக்கும் நடவடிக்கையை முறியடிப்போம் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இந்தியை எதிர்ப்பது ஏன்? – தோழர் தியாகு

“இந்தி மொழி பற்றிய அமித்ஷாவின் கருத்து இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் பன்மைத்துவத்துக்கு எதிரானது. இந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமித்ஷா நினைக்கிறாரா? இந்தியாவின் ஒற்றுமைக்கு ஒற்றை மொழி உதவாது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தி மொழி, இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்று கூறியுள்ள கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, இந்தி பேசாத மாநிலங்களுக்கு எதிராக பாஜக தனது “கலாச்சார பயங்கரவாதம் என்ற செயல்திட்டத்தைக் கட்டவிழ்த்து விட முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், “பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இந்தியைப் பயன்படுத்தி உதவி செய்த சாவர்க்கர் போல் காந்தி பிறந்த மாநிலத்தைச் சேர்ந்த அமித்ஷா நடந்து கொள்கிறார். இந்தி எங்கள் தேசிய மொழி அல்ல, அதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

‘ஒன்றிய அரசின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற அரசியல் திட்டம் நிறைவேறாது’ – திரிணாமூல் காங்கிரஸ்

இந்நிலையில், ட்விட்டர் சமூக வலைதளத்தில், ‘#இந்தி_தெரியாது_போடா’, ‘#இந்தி_வேண்டாம்_போடா’ ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன. அதோடு, #stopHindiImposition என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.

Source: PTI, NDTV

இந்திய நாடாளுமன்றத்தில் உளறி கொட்டிய ஒ.பி.எஸ்ஸின் மகன் ஒ.பி.ரவிந்தர நாத், கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்