Aran Sei

டிவிட்டர் கணக்குகளை முடக்கும் கோரிக்கை – மத்திய அரசுடன் டிவிட்டர் நிறுவனம் பேச்சுவார்த்தை

credits : ny times

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வரும் டிவிட்டர் கணக்குகளை மத்திய அரசு முடக்க கோரியது தொடர்பாக, டிவிட்டர் நிறுவனம் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் #ModiPlanningFarmerGenocide (மோடி விவசாயிகள் படுகொலைக்கு திட்டமிடுகிறார்) என்ற  ஹேஷ்டேகை பயன்படுத்திய கணக்குகளை முடக்கும்படி மத்திய அரசு டிவிட்டரிடம் கூறியது.

தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கோரிக்கைக்கு இணங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முகமது சலீம், செயற்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் ஜர்னெய்ல் சிங், ஆர்த்தி, பத்திரிகையாளர் சந்தீப் செளத்ரி, எழுத்தாளர் சஞ்சுக்தா பாசு, முகமது ஆசிஃப் கான், நடிகர் சுஷாந்த் சிங் உட்பட 257 பேரின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. பின்னர் பேச்சுரிமை, செய்தியின் தரம் ஆகியவற்றை சுட்டிக் காட்டி அந்த கணக்குகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

விவசாய போராட்டத்தை பதிவிட்டதால் கணக்குகள் முடக்கம்: யாருக்கு ஆதரவாக செயல்படுகிறது ட்விட்டர்?

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், பொது ஒழுங்கை மனதில் கொண்டு பதற்றத்தையும் வெறுப்பையும் தணிக்கவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, டிவிட்டர் நிறுவனம் நிறைவேற்ற வேண்டும் என்று எச்சரித்தது.

முடக்கிய கணக்குகளை மீண்டும் செயல்படுத்திய ட்விட்டர் – ஒரே நாளில் பல்டி

“ட்விட்டர் ஒரு இடைநிலையாளர் மட்டுமே, அரசின் உத்தரவுகளை அமல்படுத்தும் பொறுப்பு அதற்கு உள்ளது. உத்தரவை அமல்படுத்த மறுப்பது தண்டனைக்கு வழி வகுக்கும்” என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ட்விட்டருக்கு அனுப்பிய ஒரு நோட்டீசில் கூறியது.

‘வன்முறையைத் தூண்டுவதற்கு ட்விட்டரைப் பயன்படுத்த முடியாது’ – அதிபர் ட்ரம்ப்பின் கணக்கை நிரந்தரமாக முடக்கிய ட்விட்டர்

நேற்றைய தினம், மத்திய அரசு, விவசாயிகளின் போராட்டத்தின் மூலமாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க வெளிநாட்டைச் சேர்ந்த சக்திகள் சதி செய்வதாக , பாதுகாப்பு ஏஜென்சிகள் குற்றம் சாட்டியதாக கூறியது. டிவிட்டர் தளத்தில் அவ்வாறு 1,178 கணக்குகள் செயல்படுகின்றன என்றும், அவை பெரும்பாலும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் எனவும், பாகிஸ்தானின் பின்னணியிலிருந்து அவர்கள் செயல்படுகிறார்கள் எனவும் குற்றம்சாட்டியது.

இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படும் ட்விட்டர் நிறுவனம் : மத்திய அரசு கண்டனம்

இந்த டிவிட்டர் கணக்குகள், இந்திய அரசுக்கு எதிராக அதிருப்தியையும், வெறுப்பையும் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன என்றும், பல்வேறு சமூக, மத மற்றும் கலாச்சார குழுக்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க முயல்கிறது என்றும்  அரசு குற்றம் சாட்டியது. அந்த கணக்குகள் அனைத்தையும் முடக்குமாறு மத்திய அரசு டிவிட்டர் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

மீனா ஹாரிசின் ட்வீட் – சர்வதேச கவனம் பெறும் தலித் பெண் தொழிலாளர் நவ்தீப் கவுர்

இந்நிலையில், டிவிட்டர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், ”அரசாங்கத்திடமிருந்து நாங்கள் பெறும் ஒவ்வொரு அறிக்கையையும் முடிந்தவரை விரைவாக மதிப்பாய்வு செய்து நடவடிக்கை எடுத்தாலும், டிவிட்டர் நிறுவனத்தின் அடிப்படை மதிப்புகள் மற்றும் பொது உரையாடலைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளதாக தி இந்து –வில் வெளியான செய்தி கூறுகிறது.

இந்திய பிரபலங்களின் ”ஒரே மாதிரியான”  ட்விட் : பாஜகவின் அழுத்தமா? – மகாராஷ்ட்ரா அரசு விசாரிக்க முடிவு

இந்த விவகாரம் தொடர்பாக, தகவல் தொழிற்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாகவும், டிவிட்டரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்