Aran Sei

சர்ச்சைக்குரிய கருத்துகள் – கங்கனா ரணாவத்தின் பதிவுகளை நீக்கிய டிவிட்டர் நிறுவனம்

credits : the indian express

டிவிட்டர் இந்தியா நிறுவனம், நடிகை கங்கனா ரணாவத்தின் இரண்டு பதிவுகளை, தங்கள் விதிமுறைகளை மீறியதாகக் கூறி நீக்கியுள்ளது.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு, பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா, சூழலியல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் உட்பட பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று முன் தினம், ரிஹான்னா தனது டிவிட்டர் பக்கத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பதிவிட்டவுடன், அதற்கு எதிராக நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையான கருத்து தெரிவித்திருந்தார்.

“தாண்டவ் படக்குழுவினரின் தலையை வெட்டி எடுக்க வேண்டும்” – கங்கனா ரணாவத்தின் டிவிட்டர் பக்கம் முடக்கம்

அந்தப் பதிவில் விவசாயிகளை “பயங்கரவாதிகள்” என்றும் ரிஹான்னாவை “முட்டாள்” என்றும் அவர் விமர்சித்தார்.

விவசாயிகளின் போராட்டம்குறித்த மற்றொரு டிவீட்டில், “அழித்தொழிக்கப்பட வேண்டும்” மற்றும் “புற்றுநோய்” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார்.

அந்தப் பதிவு, டிவிட்டர் நிறுவனத்தின் விதிகளுக்குப் புறம்பாக அமைந்துள்ளதால், அவை நீக்கப்பட்டிருப்பதாக டிவிட்டர் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் மீது அவதூறு – கங்கனா ராணாவத்தின் வாயை மூட வைத்த தில்ஜீத் – வீடியோ

சர்சைக்குரிய கருத்துக்களுக்காக, கங்கனா ரணாவத்தின் டிவிட்டர் பதிவுகள் நீக்கப்படுவது இது முதல்முறையல்ல. கடந்த மாதம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘தாண்டவ்’ என்ற தொடருக்கு எதிராக, டிவிட்டரில் கருத்து தெரிவித்த கங்கனா “அவர்களின் தலைகளை வெட்ட வேண்டிய தருணம் இது” என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து கங்கனாவின் டிவிட்டர் பக்கம் சிறிது நேரம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்