Aran Sei

‘ட்விட்டர் நிறுவனம் நிறவெறியுடன் செயல்படுகிறது’ – ட்விட்டர் கணக்கு முடக்கம் தொடர்பாக கங்கணா ரணாவத்

ட்விட்டர் நிறுவனம் நிறவெறியுடன் செயல்பட்டு தனது கணக்கை முடக்கிவிட்டதாக, திரைக் கலைஞர் கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.

கங்கணா ரணாவத் தொடர்ந்து வெறுப்பு ஊட்டும் வகையில் பதிவிட்டு வந்ததாகக் கூறி அவரின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்குவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக  ட்விட்டர் செய்தித் தொடர்பாளரைத் தொடர்பு கொண்டபோது, ​​“இணையத்திற்கு தீங்குக்கு வழிவகுக்கும் ஆற்றலைக் கொண்ட நடத்தைகுறித்து வலுவான அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம். ட்விட்டர் விதிகளை மீண்டும் மீண்டும் மீறியதற்காக குறிப்பிடப்பட்ட கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாங்கள் வரையறை செய்துள்ள விதிமுறைகளான  வெறுக்கத் தக்க நடத்தை கொள்கை மற்றும் தவறான நடத்தை கொள்கை மீறினால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் சேவையில் உள்ள அனைவருக்கும் ட்விட்டர் விதிகளை நியாயமாகவும், பாரபட்சமின்றி செயல்படுத்துகிறோம்”என தெரிவித்துள்ளார்.

சமூக விலக்கம் செய்யப்பட்ட பௌத்தக் குடும்பங்கள்: பட்டியலினத்தோர் பௌத்தம் மாறினால் தீண்டாமை ஒழிந்திடுமா?

இந்நிலையில் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக பேசியுள்ள திரைக்கலைஞர் கங்கணா ரணாவத், “ட்விட்டர் நிறுவனம், என்னுடைய கூற்றை நிரூபித்துள்ளது. அமெரிக்கர்களும் பிறப்பால் வெள்ளையர்களும் பழுப்பு நிறமுடையவரை  அடிமைப்படுத்த உரிமை உண்டு என்று நினைக்கிறார்கள்.  என்ன நினைக்க வேண்டும், என்ன பேச வேண்டும் அல்லது என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறார்கள். நல்வாய்ப்பாக என்னுடைய குரலை உயர்த்தவும், கருத்தை வெளிப்படுத்தவும் பல்வேறு தளங்கள் உள்ளன. குறிப்பாக எனக்கான கலை சினிமா வடிவத்தில் உள்ளது. ஆயிரக்கணக்காண ஆண்டுகளாக இந்த நாட்டில் அடிமைப்படுத்தப்பட்டும், தடைவிதிக்கப்பட்டும், துன்புறுத்தப்படும் மக்களை நினைக்கும்போது என் நெஞ்சம் துடித்துப்போகிறது. அவர்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்துக் கொண்டேதானிருக்கிறது. ” என கூறியுள்ளார்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்