Aran Sei

‘வன்முறையைத் தூண்டுவதற்கு ட்விட்டரைப் பயன்படுத்த முடியாது’ – அதிபர் ட்ரம்ப்பின் கணக்கை நிரந்தரமாக முடக்கிய ட்விட்டர்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்களால் நிகழ்த்தப்பட்ட பெருங்கலவரத்தையடுத்து  அதிபர் ட்ரம்ப்பின் ‘ட்விட்டர்’ கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு வரும் 20-ம் தேதி முறைப்படி பதவிப் பிரமாணம் செய்து செய்யப்படுவதால்,  அவர் பதவி ஏற்க வழிவகை செய்ய அவரது வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் அளிக்கும் நிகழ்வு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

நிலையற்ற மனநிலையில் இருக்கும் ட்ரம்ப் : அணுகுண்டு தாக்குதல் நடத்தாமல் தடுக்க வேண்டும் – நான்சி பெலோசி

அப்போது, நாடாளுமன்றத்தின் அருகே திரண்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள், காவல் துறை தடுப்புகளையும் மீறி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றதால் பெரும் கலவரம் வெடித்தது, இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

 

அமெரிக்க கலவரத்தின் எதிரொலி: ட்ரம்ப்பின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமுக்குத் தடை விதித்த மார்க் சக்கர்பெர்க்

வன்முறையைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட வீடியோவில், வன்முறையாளர்களை பாராட்டி, அவர்களை வீடு திரும்புமாறு கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு எழுந்த கடும் கண்டனங்களைத் தொடர்ந்து ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் அந்த வீடியோவை நீக்கின.

முன்னர், ட்விட்டர் 12 மணி நேரத்துக்கு டிரம்பின் கணக்கை முடக்கி வைத்தது. எதிர்காலத்தில் இது போல வரம்பு மீறல்கள் நடந்தால் அவரது கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள எந்த எல்லைக்கும் செல்லும் ட்ரம்ப் : பராக் ஒபாமா கண்டனம்

இந்நிலையில்,அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு காரணம்  ட்விட்டரில் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட கருத்துகள்தான். இதனால், அவரின் தனிப்பட்ட ட்விட்டர்  கணக்கு முடக்கப்பட்டது என்று ட்விட்டர் தெரிவித்தாதாக டைம்ஸ் ஆப் இந்தியா  பதிவிட்டுள்ளது.

 

அமெரிக்க மோடியும் இந்திய ட்ரம்பும் – வீழும் ஜனநாயகம்

உடனே, @POTUS என்ற அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ கணக்கிலிருந்து ட்ரம்ப் ட்வீட் செய்யத் தொடங்கினார். ஆரம்பத்தில் அப்பதிவுகள் நீக்கப்பட்டன என்று சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க அதிபருக்கான @POTUS என்ற ட்விட்டர் கணக்கும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துப் பதிவிடலாம் என்பதால் அந்தக் கணக்கை நீக்குவதாக ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அந்தக் கணக்கில் பதிவிடப்பட்ட 57000  ட்வீட்களும் நீக்கப்பட்டுள்ளன என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

ட்விட்டர் நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் “தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் உலகத் தலைவர்களிடமிருந்து பொதுமக்கள் நேரடியாகக் கேட்க எங்கள் தளம் பொது நல கட்டமைப்பாக உள்ளது. இது ஒரு கொள்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகள் எங்கள் விதிகளுக்கு அப்பாற்பட்டவை அல்ல, வன்முறையைத் தூண்டுவதற்கு ட்விட்டரைப் பயன்படுத்த முடியாது. எங்கள் கொள்கைகள் மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து வெளிப்படையாக இருப்போம்.” என்று கூறப்பட்டுள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்