Aran Sei

பிரதமர் மோடியை விமர்சித்ததால் ட்விட்டர் அனுப்பிய நோட்டீஸ் – கார்டூனிஸ்டை பணியிடை நீக்கம் செய்த நியூஸ் 18 நிர்வாகம்

பிரதமர் மோடி குறித்து கார்ட்டூன் பதிவிட்டதற்காக, பிரபல அரசியல் கார்ட்டூனிஸ்ட் மஞ்சுலிற்கு ட்விட்டர் நிறுவனம் நோட்டீஸ் வழங்கியுள்ள நிலையில், அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளதாக நியூஸ் 18 தொலைக்காட்சி குழுமம் தெரிவித்துள்ளது.

தொழிலாதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான நியூஸ் 18 தொலைக்காட்சி நெட்வொர்க்கில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் கார்ட்டூனிஸ்டாக மஞ்சுல் பணிபுரிந்து வருகிறார்.

மேட்டூர் அணை உருவான வரலாறும் மக்களின் தியாகமும் – சூர்யா சேவியர்

மஞ்சுல் பணியிடை நீக்கம் செய்யப்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை, அவர் மீதான இந்த திடீர் நடவடிக்கை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது என நியூஸ் 18 வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 4 ஆம் தேதி, மஞ்சுல் அவரது ட்விட்டர் கணக்கான @மஞ்சுல்டூன்ஸ் உடன் இணைக்கப்பட்டிருந்த மின்னஞ்சல் முகவரிக்கு ட்விட்டர் நிறுவனம் அனுப்பியிருந்த மின்னஞ்சலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

‘சொந்த கட்சியின் பணத்தையே திருடிய கேரள பாஜக; அவிழும் உண்மைகள் – ராஜீவ் ராமச்சந்திரன்

அந்த மின்னஞ்சலில், ”மஞ்சல் ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்ட கருத்துக்கள் ’இந்திய சட்டத்தை மீறுகிறது’ என ட்விட்டரின் இந்தியப் பிரிவு அதிகாரிகள் நம்புகின்றனர். மேலும் மஞ்சுலின் ட்விட்டர் கணக்கிற்கு எதிராக நடவடிக்கையைத் தொடங்குமாறு ட்விட்டர் நிறுவனத்தை இந்திய சட்ட அமலாக்கத்துறை கேட்டுக்  கொண்டுள்ளது” என தெரிவிக்கிப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனம் அனுப்பியிருந்த மின்னஞ்சலைப் பகிர்ந்திருந்த மஞ்சுல், அனைவரும் மோடியை பாராட்ட வேண்டும் என பதிவிட்டிருந்தார். மேலும், அவரது எந்த பதிவு சிக்கலை ஏற்படுத்தியிருந்தது என்பதை அரசாங்கம் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், ட்விட்டர் நிறுவனம் அந்த மின்னஞ்சலில், “அரசாங்கத்தின் கோரிக்கை தொடர்பாக பயனாளருக்கு தெரிவிக்க மட்டுமே இந்த மின்னஞ்சல் அனுப்பட்டுள்ளது. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனினும் பயனாளர் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவோ, குடிமை சமூக அமைப்புகளைத் தொடர்பு கொள்ளவோ, தானாகவே உள்ளடக்கத்தை நீக்கவோ அல்லது வேறு தீர்மானத்தை கண்டுபிடிக்கலாம்” என பரிந்துரை செய்துள்ளது.

மஞ்சுலின் மின்னஞ்சல் தொடர்பான பதிவு பதிவிட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, அவரை பணியிடை நீக்கம் செய்வதாக நியூஸ் 18 நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்