Aran Sei

‘இந்திய அரசியலில் தலையிடும் ட்விட்டர்’ – ட்விட்டர் நிர்வாகம் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

னது ட்விட்டர் கணக்கை முடக்கியதால் பாரபட்சமாக செயல்படுவதுடன், இந்தியாவின் அரசியலில்  ட்விட்டர் தலையிடுகிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் காணொளியில், ”கணக்கை முடக்கியதன் மூலம் என்னைப் பின் தொடரும் கோடிக்கணக்கானவர்களுக்கான கருத்து உரிமையை ட்விட்டர் மறுத்துள்ளது. இது இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பின் மீதான தாக்குதல்” என கூறியுள்ளார்.

இந்திய அரசுக்கு ட்விட்டர் கட்டுப்பட்டுள்ளதால், எங்களின் அரசியலை வரையறுக்க இந்த நிறுவனங்களை இந்தியர்கள் அனுமதிக்க வேண்டுமா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

”ட்விட்டர் ஒரு நடுநிலையான தளம் அல்ல என்பது இப்போது புலனாகிறது. இது பக்க சார்புடையது. அன்றைய அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதை ட்விட்டர் கேட்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்

“என்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்கியதன் மூலம், நம்முடைய அரசியல் அது தலையிடுகிறது. ஒரு நிறுவனம், நமது அரசியலை வரையறுப்பதன் மூலம்  அதன் வணிகத்தை மேற்கொள்கிறது.   ஒரு அரசியல்வாதியாக, நான் இதை விரும்பவில்லை” என கூறியுள்ளார்.

”இது ராகுல் காந்தியின் மீதான தாக்குதல் அல்ல, நாட்டின் ஜனநாயக கட்டமைப்பின் மீதான தாக்குதல். நீங்கள் ராகுல் காந்தியின் கணக்கை மட்டும் முடக்கவில்லை. எனக்கு இருக்கும் 2 கோடிக்கும் அதிகமான பின் தொடர்பவர்களின் கருத்து உரிமையைப் பறித்துள்ளீர்கள். இதை தான் நீங்கள் செய்துள்ளீர்கள்” என ராகுல் காந்தி அந்தக் காணொளியில் பேசியுள்ளார்.

”நம் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ட்விட்டரில் நாம் நினைத்த பகிர முடியும் என்ற வகையில் ஒரு ஒளி பிறந்தததாக நினைத்திருந்தேன். ஆனால், அது அப்படி அல்ல என்பது நிரூபணம் ஆகியுள்ளது.” என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்