மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பை தொடர்ந்து நாட்டைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கும் ராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மாநகரின் மக்கள் பானைகளையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் வீசி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த சமூக ஊடகங்களின் தடையை விரிவுபடுத்தும் விதமாக, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக் மற்றும் அது தொடர்பான செயலிகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தவறான தகவல்களைப் பகிரப்படுவதால், அந்தச் செயலிகளுக்கான பயன்பாட்டைத் தடை செய்யுமாறு தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை நிறுவனங்களுக்குப் பிப்ரவரி 5 ஆம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த நிலையில், ட்விட்டர் இரவு 10 மணி முதல் செயல்படவில்லை என்பதை, சமூக ஊடகங்களின் இடையூறுகள் மற்றும் பணிநிறுத்தங்களை கண்காணிக்கும் நெட் பிளாக்ஸ் உறுதிப்படுத்தியது.
மியான்மரில் செயல்படும் நார்வே நாட்டைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான டெலினோர், இந்த உத்தரவை ஏற்பதாகக் கூறினாலும், ’உத்தரவின் அவசியத்தை’ கேள்வி எழுப்பியது. மாநில ஊடகங்கள் பெரிதும் தணிக்கை செய்யப்பட்ட நிலையில், ஃபேஸ்புக் செய்தி மற்றும் தகவல் தொடர்பின் மிக முக்கிய ஆதாரமாக மாறியது. போராட்டங்களை ஒழுங்கமைக்கவும் அது பயன்படுத்தப்பட்டது.
ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வழக்குகள்: உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் – மதன் பி.லோக்கூர்
ஆட்சி கவிழ்ப்பிற்கும், அரசியல்வாதிகள் மற்றும் செயல்பாட்டார்களின் கைதிற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தலைநகர் யாங்கூனில் வசிக்கும் மக்கள் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 5) இரவும் தங்கள் வீடுகளின் பால்கனி மற்றும் ஜன்னல்கள் வழியாகத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
முன்னதாக வெள்ளிக்கிழமை, ஆங் சான் சூகியின் நேஷனல் லீக் ஃபார் டெமாகிரசி கட்சியைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், தங்களை மக்களின் ஒரே நியாயமான பிரதிநிதிகள் என அறிவித்ததோடு, நாட்டின் அரசாங்கத்திற்கு சர்வதேச அங்கிகாரத்தை கோரியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை: யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை – பாஜக திட்டவட்டம்
மியான்மரில் நடைபெற்ற தேர்தல்களில் முறைகேடு என ராணுவம் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையெனத் தேர்தல் ஆணையம் மறுத்துவந்த நிலையில், ராணுவத்தின் குற்றச்சாட்டுகள்மீது ஆங் சான் சூகியின் மற்றும் அவரது கட்சியினர் நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கோரி, நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் தொடங்க இருந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
நியூயார்க்கில் பேசிய ஐநா பொதுசெயலாளர், அன்டோனியோ குட்டெரெஸ் மியார்மரில் மீண்டும் ஜனநாயகம் மீண்டும் மலரச் செய்வதற்காக, சர்வதேச ஒன்று திரட்டலுக்கான அனைத்து முயற்சியையும் மேற்கொள்ளும் என உறுதியளித்தார்.
ஐநா சபையின் செய்தி தொடர்பாளர், ஸ்டீபன் டுஜாரிக், துணை தளபதி, துணை ஜெனரல் சோ வின்னிடம், ”நாட்டில் நடைபெற்றும் வரும் ஜனநாயக சீர்திருத்தங்களைக் குலைக்கும் விதமாக, ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதை, ஐநா பொது செயலாளர் கண்டித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
மியான்மர் இராணுவப் புரட்சி – ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை
ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், 138 அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், 18 செயல்பாட்டாளர்கள் ஆகியோரை கைது செய்திருப்பதாக, அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது.
யங்கோன் கல்வி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது பேசிய பேராசிரியர், நவ் தாசின், ”நாங்கள் அவர்களுடன் ஒருபோதும் ஒன்றாக இருக்க மாட்டோம். இந்த வகையான அரசாங்கம் விரைவில் சரிய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
1962 ஆம் ஆண்டிலிருந்து ஐம்பது ஆண்டுகளாக ராணுவ ஆட்சியில் இருந்த இருந்த மியான்மரில், ஜனநாயகத்தின் பெயரில் 2015 ஆம் ஆண்டு ஆங் சான் சூகி பதவியேற்றார். இந்தக் காலக்கட்டத்தில் தான் காலனி கால அடக்குமுறை சட்டங்கள், ரோகிங்கியா முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேறின என்பது குறிப்பிடத்தக்கது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.