ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனிஷ் மஹேஸ்வரி மீது உத்தரபிரதேச காவல்துறை முதல்தகவல் அறிக்கை பதிந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் இணையதளத்தில், இந்தியாவின் எல்லைப்பகுதிக்குள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்றும் லடாக் பகுதி இல்லாதது போன்று போன்று தனி ட்விட்டர் வரைபடம் வெளியிட்டது தொடர்பாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்த படத்தை அதன் இணையதளத்திலிருந்து ட்விட்டர் நிர்வாகம் நீக்கியதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த பிரவீன் பாடி,
ட்விட்டரின் இந்தியாவின் செயல் இந்தியர்களின் மனதை புண்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.