Aran Sei

ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் குறைதீர்க்கும் அதிகாரி பதவி விலகல் – ஒன்றிய அரசின் அழுத்தம் தான் காரணமா?

ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் வசிப்பிட இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரி பதவி விலகியுள்ளதாக   தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டர் இந்தியா நிறுவனம், இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரியாக நியமித்திருந்த தர்மேந்திரா சதுர் பதவி விலகியுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்

புதிய தொழிற்நுட்ப சட்டத்தின் படி, ட்விட்டர் பயனாளர்கள் மற்றும் மற்றவரின் பதிவால் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் குறைகளைக் கேட்டறிய தலைமை குறைதீர்க்கும் அதிகாரி, நோடல் அதிகாரி, வசிப்பிட இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரி ஆகியோரை நியமிக்க வேண்டுமென இந்திய ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், வசிப்பிட இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரி பதவி விலகியுள்ளதால் , ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் இணையதளத்தில்,  குறை தீர்க்கும் அதிகாரி என்ற இடத்தில், நிறுவனத்தின் பெயரும் அமெரிக்க முகவரியும் இடம்பெற்றுள்ளதாகவும் தி இந்து கூறுகிறது.

பாபர் மசூதி இடிப்பை விமர்சிக்கும் வகையில் கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா – ட்விட்டர் கணக்கு குறித்து புகார் அளித்த ஒன்றிய அரசு

கடந்த ஜூன் 5 அன்று, குறை தீர்க்கும் அதிகாரிகுறித்த தகவல்களைக் கேட்டு ஒன்றிய அரசு, ட்விட்டர் இந்தியா நிறுவனத்திற்கு கடைசியாக நோட்டீஸ் அனுப்பியிருந்ததாகவும், இதற்கிடையில் தான் அந்நிறுவனம் தர்மேந்திரா சதுரை நியமித்திருந்ததாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழிற்நுட்பச் சட்டத்தின் கொண்டுவரப்பட்டதிலிருந்து ட்விட்டர் இந்தியா நிறுவனத்துக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே முரணான சூழல் நிலவி வருவதாகவும், புதிய விதிகளை ட்விட்டர் நிர்வாகம் பின்பற்றத் தவறுவதாகவும் ஒன்றிய அரசு குற்றம்சாட்டிவருவதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்