Aran Sei

ஆர்.எஸ்.எஸ் தொடர்பு அமைப்புக்கு நிதி வழங்கிய ட்விட்டர்: வெறுப்பையும் மதவெறியையும் பரப்புவர்களை ஊக்கப்படுத்துகிறீர்களா? – கேள்வி எழுப்பும் பிரபலங்கள்

credits : the economic times

தவெறியையும் பாசிசத்தையும் பரப்பும் பிற்போக்கு அமைப்பான சேவா பாரதிக்கு ட்விட்டர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜேக் டார்சி நிதி வழங்கியது ஏன்? என ட்விட்டர் தளத்தில் பலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இந்தியாவில் நேற்றைய தினம்,  3,48,421 பேர்   கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  2,33,40,938 ஆக  உயர்ந்துள்ளது. இதுவரை, கொரோனா நோய்த்தொற்றால்  2,54,197  பேர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால்  4,205  பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜேக் டார்சி, இந்தியாவுக்கு கொரோனா நிவாரண நிதியாக ஏறக்குறைய 110 கோடி ரூபாயை வழங்கியுள்ளார். மேலும், இந்தப் பணம், ஏற்கனவே நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிற கேர், ஏய்ட் இந்தியா, சேவா பாரதி ஆகிய தொண்டு நிறுவனங்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

மத்திய அரசுக்கு அடிபணிந்த ட்விட்டர் நிறுவனம் – 500 க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் சூழலில், ராஷ்ட்ரிய சுயம் சேவகத்துடன் (ஆர்.எஸ்.எஸ்) தொடர்பில் உள்ள சேவா பாரதிக்கு டார்சி நிதி வழங்கியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை –  ட்விட்டர் நிறுவனத்திற்கு மறைமுக எச்சரிக்கை

ஜேக் டார்சி தன்னுடைய அறிக்கையில், சேவா பாரதி இந்து நம்பிக்கை கொண்டுள்ள மனிதாபிமான செயல்களை ஆற்றும் தொண்டு நிறுவனம் என்று குறிப்பிட்டுள்ளார். சேவா பாரதி தொண்டு நிறுவனமும் ஜேக் டார்சிக்கு தங்களுடைய நன்றியை  தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறை சோதனை தொடர்பாக நடிகை டாப்ஸியின் ட்விட்டர் பதிவு – விமர்சனம் செய்த நடிகை கங்கணா ரணாவத்

ட்விட்டர் நிறுவனம் சேவா பாரதிக்கு, நிதி வழங்கியுள்ளதை குறிப்பிட்டு எழுத்தாளர் மீரா காம்தார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பாசிச அமைப்புக்கு நிதி வழங்குகிறீர்களா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

ட்ரெண்டாகும் ‘கொரோனாவைக் கட்டுப்படுத்த தவறிய மோடி அரசு’ – ட்விட்டர் பதிவுகளை நீக்கிய மத்திய அரசு

இந்திய அமெரிக்க நடிகையான மோனிக்கா கில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”இந்தியாவில் வெறுப்பையும் பாசிசத்தையும் பரப்ப பெரும் உதவியைச் செய்துள்ளீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

‘ட்விட்டர் நிறுவனம் நிறவெறியுடன் செயல்படுகிறது’ – ட்விட்டர் கணக்கு முடக்கம் தொடர்பாக கங்கணா ரணாவத்

பத்திரிகையாளர் திலிப் மண்டல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”கொரோனா தொற்று சமயத்தில் வெறுப்பை பரப்புவர்களுக்கு நிதி வழங்காதீர்கள். சேவா பாரதி வெறுப்பையும் மதவெறியையும் பரப்புகிற அமைப்பு என்பது அனைவரும் அறிந்தது” என்று ட்விட் செய்துள்ளார்.

முடக்கிய கணக்குகளை மீண்டும் செயல்படுத்திய ட்விட்டர் – ஒரே நாளில் பல்டி

பீட்டர் ஃப்ரெட்ரிச் எனும் பத்திரிகையாளர் “இந்து தேசியவாதம் பேசுகிற, நாஜிக்களின் நடைமுறைகளைப் பின்பற்றுகிற ஒரு போராளிக்குழுவான சேவாபாரதிக்கு ட்விட்டர் நிறுவனம் ஏன் கோடிக்கணக்கில் நிதி அளிக்கிறது. ட்விட்டர் நிறுவனம் தன்னுடைய முடிவை மறுபரிசீலன செய்யுமா”? என்று ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

விவசாய போராட்டத்தை பதிவிட்டதால் கணக்குகள் முடக்கம்: யாருக்கு ஆதரவாக செயல்படுகிறது ட்விட்டர்?

சமூக வலைதளங்கள் ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்