Aran Sei

மத்திய அரசுக்கு அடிபணிந்த ட்விட்டர் நிறுவனம் – 500 க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

credits : wsj

த்திய அரசின் உத்தரவிற்கு இணங்க ஐநூறுக்கும் மேற்பட்ட கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி  வெளியிட்டுள்ளது.

முன்னதாக, விவசாயிகள் போராட்டத்தில் நடக்கும் தினசரி நடவடிக்கைகளைத் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்த, பலரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. இதில் தனிநபர்களின் ட்விட்டர் கணக்குகள், குழுக்களின் கணக்குகள், செய்தி நிறுவனங்களின் கணக்குகளும் அடக்கம்.

விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பிலிருந்து, போராட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை வெளிக் கொண்டு வந்த கேரவன் பத்திரிகை, டிராக்டர் 2 ட்விட்டர், கிசான் ஏக்தா மோர்ச்சா ஆகிய கணக்குகளும் முடக்கப்பட்டன.

ஃபேஸ்புக்கை அடுத்து ட்விட்டர், இன்ஸ்டாகிராம் முடக்கம் – கலவரத்தை தடுக்க மியான்மர் ஆட்சிக்குழு நடவடிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முகமது சலீம், செயற்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் ஜர்னெய்ல் சிங், ஆர்த்தி, பத்திரிகையாளர் சந்தீப் செளத்ரி, எழுத்தாளர் சஞ்சுக்தா பாசு, முகமது ஆசிஃப் கான், நடிகர் சுஷாந்த் சிங் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் உட்பட 257 கணக்குகளை டிவிட்டர் முடக்கியது.

முடக்கிய கணக்குகளை மீண்டும் செயல்படுத்திய ட்விட்டர் – ஒரே நாளில் பல்டி

ஆனால், அரசு அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்புகளில், குறிப்பிட்ட கணக்குகளும் ட்வீட்டுகளும் கருத்து சுதந்திர உரிமைக்குள் வருபவை என்றும், செய்திகள் தரம் வாய்ந்தவை என்றும் கூறி அந்தக் கணக்குகளை ட்விட்டர் அதே நாளில் மறுபடியும் செயல்பட அனுமதித்தது.

விவசாய போராட்டத்தை பதிவிட்டதால் கணக்குகள் முடக்கம்: யாருக்கு ஆதரவாக செயல்படுகிறது ட்விட்டர்?

இதைத்தொடர்ந்து, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவை செயல்படுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் ட்விட்ர் உயர்மேலாளர்கள் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் மத்திய அரசு எச்சரித்தது.

விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகள்: அழிக்க மறுக்கும் டிவிட்டர் – ‘கூ’ தளத்திற்கு மாறும் மத்திய அமைச்சர்கள்

கடந்த பிப்ரவரி 4-ம் தேதி, விவசாயிகள் போராட்டத்தின் மூலமாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க வெளிநாட்டைச் சேர்ந்த சக்திகள் சதி செய்வதாக , பாதுகாப்பு அமைப்புகள் குற்றம் சாட்டியதாக அரசு கூறியது.

‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை – அரசின் மிரட்டல் என்று பத்திரிகையாளர்கள் குற்றச்சாட்டு

ட்விட்டர் தளத்தில் அவ்வாறு 1,178 கணக்குகள் செயல்படுவதாக கூறிய பாதுகாப்பு அமைப்புகள், அவை பெரும்பாலும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் எனவும், பாகிஸ்தானின் பின்னணியிலிருந்து செயல்படுகிறார்கள் எனவும் கூறியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

டிவிட்டர் கணக்குகளை முடக்கும் கோரிக்கை – மத்திய அரசுடன் டிவிட்டர் நிறுவனம் பேச்சுவார்த்தை

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, சர்வதேச பிரபலங்களின் கருத்தை ட்விட்டரின் முதன்மை செயல் அதிகாரி ஜாக் டார்சி லைக் செய்தது, அவரின் நடுநிலைத்தன்மையை கேள்விக்குள்ளாகுகிறது என்றும் அந்நிய நாட்டு சதி உள்ளது என்ற கருத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது என்றும் மத்திய அரசு அதிகாரிகள் கூறியிருந்தனர்.

மீனா ஹாரிசின் ட்வீட் – சர்வதேச கவனம் பெறும் தலித் பெண் தொழிலாளர் நவ்தீப் கவுர்

இந்த ட்விட்டர் கணக்குகள், இந்திய அரசுக்கு எதிராக அதிருப்தியையும், வெறுப்பையும் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகவு, அவை பல்வேறு சமூக, மத மற்றும் கலாச்சார குழுக்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க முயல்வதாகவும் கூறி, 1,178 கணக்குகளை முடக்க மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

இந்திய பிரபலங்களின் ”ஒரே மாதிரியான”  ட்விட் : பாஜகவின் அழுத்தமா? – மகாராஷ்ட்ரா அரசு விசாரிக்க முடிவு

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், இன்றைய தினம் (10.02.21) ஐநூறுக்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மிண்ட் இணையதளம் செய்தி  வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்