Aran Sei

உலக அளவில் இரட்டை குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு – செயற்கை கருத்தரிப்பு முறையே காரணம் என ஆய்வில் தகவல்

செயற்கை கருத்தரிப்பு முறை அதிகரித்திருப்பதால், உலக அளவில் இரட்டை குழந்தைகள் பிறக்கும் விகிதம் அதிகரிப்பதாக உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

1980 ஆம் ஆண்டிலிருந்து பார்க்கும்போது இரட்டை குழந்தைகள் பிறப்பு மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு பின் 1000 குழந்தை பிறப்பில் 9 பேர் இரட்டையர்களாக இருந்த நிலையில், தற்போது அது 12 ஆக உயர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.

மாண்டேன் (Monden) என்ற அமைப்பு நடத்திய இந்த ஆய்வில், வட அமெரிக்காவில் இரட்டை குழந்தைகள் பிறப்பு 71 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஆசியாவில் இது 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும், ஒரே கருமுட்டையிலிருந்து பிறக்கும் இரட்டையர்களின் (Identical Twins) எண்ணிக்கை 1000 குழந்தைகளில் 4 என்ற நிலையில் இருப்பதாகவும், ஆனால், வெவ்வேறு கருமுட்டைகளிலிருந்து பிறகும் இரட்டையர்களின் (Non – Identical Twins) எண்ணிக்கையே அதிகரித்திருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பணம் அதிகம் செலவாகும், செயற்கை கருத்தரிப்பு முறை, 1980களுக்குப் பிறகு, பணக்கார நாடுகளில் மட்டுமல்லாமல், ஆசிய நாடுகளிலும் பரவியுள்ளதால், இரட்டை குழந்தைகள் பிறகும் விகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Source: Reuters

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்