டிவிட்டர் இந்தியா சமூக வலைதள நிறுவனம் மீது நடிகர் சித்தார்த் குற்றம்சாட்டியுள்ளார். தன்னை பின் தொடரும் ஒருவரின் ட்விட்டர் பதிவைக் குறிப்பிட்டு சித்தார்த் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
நடிகர் சித்தார்த் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ள அந்த ட்விட்டர் பதிவில், ”நான் 5 முறை ஹேக் செய்யப்பட்டுள்ளேன், எனது ட்வீட்கள், தடை செய்யப்பட்டு மறைக்கப்படுகின்றன. பின்தொடர்பவர்கள் எனது பதிவுகளை பார்க்க முடியவில்லையெனப் புகார் கூறுகிறார்கள். அவர்கள் கணக்கிலிருந்து தானாக விடுபடுதல் நடக்கிறது. இருப்பினும் 16 மாதங்களாக என்னைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மாறவில்லை. ஏதோ ஒன்று நிச்சயமாக நடக்கிறது. என்ன விஷயம் @ட்விட்டர் இந்தியா” என்று தெரிவித்துள்ளார்.
I've been hacked over 5 times. My tweets are being restricted and hidden. Followers are complaining they can't see any of my tweets, that they were auto unfollowed. My Twitter follower count has not changed in 16 months. Something is definitely off! What's up @TwitterIndia??? 🤗 https://t.co/3IMBa8s6vu
— Siddharth (@Actor_Siddharth) February 1, 2021
முன்னதாக, விவசாயிகள் போராட்டத்தின் அன்றாட நிகழ்வுகளைப் பதிவிட்டு வந்த, கிசான் ஏக்தா மோர்சாவின் ட்விட்டர் கணக்கு முதலில் முடக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முகமது சலீம், செயற்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் ஜர்னெய்ல் சிங் மற்றும் ஆர்த்தி, பத்திரிகையாளர் சந்தீப் செளத்ரி, எழுத்தாளர் சஞ்சுக்தா பாசு, முகமது ஆசிஃப் கான், ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள், அந்த நிறுவனத்தால் முடக்கப்பட்டன.
ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள டிவிட்டர் நிறுவனம், சட்டரீதியிலான கோரிக்கையை ஏற்று, நீதிமன்ற உத்தரவின் பெயரிலேயே கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறியதோடு, கணக்கை முடக்க கோரி “ஒரு சட்ட அமலாக்கத்துறை அதிகாரி, அரசாங்க அதிகாரி அல்லது பிற மூன்றாம் தரப்பினர் (third party) சட்ட ரீதியாக முறையிடலாம்” என தெரிவித்துள்ளது.
நடிகர் சித்தார்த், அண்மையில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30 ஆம் தேதி பதிவிட்டிருந்த ஒரு ட்விட்டில், காந்தியை கொன்ற கோட்சே மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விமர்சித்திருந்தார். அதேபோல், மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளையும், நடிகர் சித்தார்த் அவ்வப்போது விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.