Aran Sei

தி காஷ்மீர் ஃபைல்ஸ் போல இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதையும் படமாக்க வேண்டும் – ஐஏஎஸ் அதிகாரியின் ட்விட்டுக்கு நடவடிக்கை எடுக்க கோரும் பாஜக

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் செய்துள்ள ட்வீட்களுக்காக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக கோரியுள்ளது.

தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கான், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பிராமணர்களின் வலியைக் காட்டுகிறது. அனைத்து மரியாதையுடன் பாதுகாப்பாக காஷ்மீரில் வாழ அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். பல மாநிலங்களில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதைக் காட்ட அந்த தயாரிப்பாளர் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும். இஸ்லாமியர்கள் பூச்சிகள் அல்ல. அவர்களும் மனிதர்கள். நம் நாட்டின் குடிமக்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்

சமூகத்தில் வன்முறையைக் கையாளும் ஒரு பிரிவினர் உண்மைக்கு செவிக்கொடுக்காமல், தங்கள் காதுகளை பொத்திக்கொண்டுள்ளனர் என்றும் படித்தவர்கள் கூட உண்மை பேசுபவர்களை அவதூறு செய்ய மோசமான சொற்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், மற்றொரு ட்வீட்டில், “பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் படுகொலைகளை காட்ட ஒரு புத்தகம் எழுத நினைத்தேன். அதை வைத்து, காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற ஒரு திரைப்படத்தை சில தயாரிப்பாளர்கள் தயாரித்து, சிறுபான்மையினரின் வலியையும் வேதனையையும் அனைத்து இந்தியர்களுக்கும் காட்ட முடியும் என நினைக்கிறேன்” என்று நியாஸ் கான் குறிப்பிட்டுள்ளார்.

‘குஜராத் ஃபைல்ஸ் என்ற பெயரில் படமெடுத்தால் வெளியிட அனுமதிப்பீரா?’ – பிரதமருக்கு பாலிவுட் இயக்குநர் வினோத் காப்ரி கேள்வி

  • நியாஸ் கானி ட்வீட்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் மாநிலச் செயலாளர் ரஜ்னீஷ் அகர்வால், “நியாஸ் கான் ஒரு விளம்பர பிரியர். இதற்கு முன்பும் இதே போன்ற செயல்களைச் செய்துள்ளார். நியாஸ் கானின் செயற்பாடுகளை மாநில அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு, அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது” என்று கூறியுள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்