Aran Sei

ட்ரெண்டாகும் ‘கொரோனாவைக் கட்டுப்படுத்த தவறிய மோடி அரசு’ – ட்விட்டர் பதிவுகளை நீக்கிய மத்திய அரசு

ந்தியாவில் மோடியின் பாஜக அரசு கொரோனா தொற்றை கையாண்ட விதத்தை குறித்து விமர்சித்த சுமார் 50 ட்விட்டர் கணக்குகளை மத்திய பாஜக அரசு பொது மக்கள் பார்வையில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா தற்போது கொரோனா இரண்டாவது அலையால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. தினசரி நோய்த்தொற்றுகள் 300,000 ஐக் கடந்து செல்கின்றன. மொத்த தினசரி இறப்புகளின் எண்ணிக்கை 2,000 க்கும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் போக்குக்குக் கண்டனம் தெரிவித்து பதிவிடப்பட்ட ட்விட்டர் கணக்குகளைத் தடை செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் முறையீட்டுக்குப் பதிலளிக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பெர்க்லேன் க்லைன் மையம் கோரிக்கையை ஏற்று கணக்குகளைப் பதிவுகளை நீக்கியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கொரோனவை கட்டுப்படுத்த தவறியதை குறித்து பதிவிட்ட ட்விட்டர் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியா அல்லாத மற்ற நாடுகளுக்கு தெரியும் என்பதையும் அந்நிறுவனம் கூறியுள்ளதாக தி வயர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, கொரோனா குறித்து வதந்தி பரப்பிய பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து நீக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு தெரியும் சில ட்விட்டர் பதிவுகளின் படங்களையும் தி வயர் வெளியிட்டுள்ளது.

 

மேலும், “மோடி பேரிடரை உருவாக்கிறார்” என்று பெரும்பான்மையாக பதிவிடப்பட்ட ட்விட்டர் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், தப்லிக் ஜமாத் மற்றும் கும்பமேளாவை ஒப்பிட்டுப் பதிவிட்டு பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்