Aran Sei

பிரதமரை விமர்சித்து ட்வீட் – பணிநீக்கம் செய்யப்பட்ட கோ ஏர் நிறுவன பைலட்

credits : deccan herald

பிரதமரை விமர்சித்து ட்வீட் செய்த கோ ஏர் (Go Air) நிறுவனத்தின் பைலட் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஜனவரி 7 ஆம் தேதி கோ ஏர் நிறுவனத்தைச் சேர்ந்த பைலட் மிக்கி மாலிக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடி ஒரு முட்டாள். நீங்களும் என்னை பதிலுக்கு முட்டாள் என அழைக்கலாம். அது பிரச்சனையில்லை. நான் ஒரு ஆளே இல்லை. ஆனால், நான் பிரதமர் கிடையாது. பிரதமர் மோடி ஒரு முட்டாள்.” என்று பதிவு செய்திருந்ததாக  இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து அவர் அந்த பதிவுகளை தன் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.

மோடிக்கு எதிராக ட்வீட் – கைது செய்யப்பட்ட இளைஞர்

இதையடுத்து அவர், தன் ட்விட்டர் பக்கத்தில், “பிரதமரைப் பற்றிய எனது ட்விட்டர் பதிவுக்கும், எனது பக்கத்தில் உள்ள வேறு சில பதிவுகளாலும்  யாருடைய உணர்வுகளாவது புண்பட்டிருந்தால் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் ட்வீட் செய்தது என்னுடைய தனிப்பட்ட கருத்து கோ ஏர் நிறுவனத்திற்கும் அந்த பதிவுகளுக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த ஒரு தொடர்பும் இல்லை.” என்று பதிவிட்டுள்ளார்

ஏழைகள் வீட்டில் உணவருந்தும் அமித் ஷா – பிரதமரின் பழைய ட்வீட்டை பகிர்ந்து கேலிசெய்யும் திரிணாமுல்

இந்நிலையில் ட்விட்டரில் பிரதமரை விமர்சித்து பதிவிட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு மிக்கி மாலிக்கை கோ ஏர் விமான நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேசிய கோ ஏர் விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், இது போன்ற விஷயங்களை நிறுவனம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக போலி செய்தி – ஏஎன்ஐ நிறுவனம் மீது குற்றச்சாட்டு

மேலும், அதன் ஊழியர்கள் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சமூக வலைதள நடத்தை உள்ளிட்ட கொள்கைகளுக்கு இணங்க வேண்டியது கட்டாயமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

”எந்தவொரு தனிநபரோ அல்லது ஊழியரோ வெளிப்படுத்தும் தனிப்பட்ட கருத்துக்களுடன் விமான நிறுவனம் தன்னை இணைத்துக் கொள்ளாது.” என்று கோ ஏர் விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

கோட்சே ஓர் உண்மையான தேச பக்தர்: பாஜக தலைவர் ட்வீட்

கோ ஏர் விமான நிறுவனம், ட்வீட் தொடர்பாக ஒரு விமானியை பதவி நீக்கம் செய்வது இது முதல் முறை அல்ல. சீதை மற்றும் இந்து மதம் குறித்து ஆட்சேபகரமான ட்வீட் செய்ததாக கூறி, 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு பயிற்சி விமானியை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்