Aran Sei

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு – வீடுகளில் கோலமிட்டு, கருப்பு கொடி ஏந்தி எதிர்பைத் தெரிவிக்கும் மக்கள்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது எனக்கூறி கிராம மக்கள், தங்கள் வீடுகளில் ’ஸ்டெர்லைட் வேண்டாம்’ என கோலமிட்டும், கருப்பு கொடி ஏத்தியும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் துவங்கிய போராட்டத்தைக் காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்காலிகமாக ஒத்திவைத்திருந்த மக்கள், நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து முதல்வருக்குக் கடிதம் அளித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை திறப்பதில் பாஜகவிற்கு மறைமுகமாக உதவும் திமுக, அதிமுக – ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

இந்நிலையில், இன்றைய தினத்தை (ஏப்ரல் 29) கருப்பு தினமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். அதன்படி, வீடுகளில் ஸ்டெர்லைட்டை திறக்காதே! அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டு என வீட்டு வாசலில் கோலமிட்டும், வீடு, தெரு, ஊர்களில் கருப்பு கொடி கட்டியும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ”கருப்புச் சட்டை அணிவோம், ஆடைகளில் கருப்பு பேட்ச் அணிவோம் என அணிவோம் என்றும், மாலை 5 மணி முதல் 8 மணிவரை வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டரை கருப்பாக்குவோம்” எனவும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைபினர் தெரிவித்துள்ளனர்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்