Aran Sei

ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் பிரச்னைகுறித்து மீண்டும் பேசிய துருக்கி அதிபர் – கண்டனம் தெரிவித்த ஒன்றிய அரசு

க்கிய நாடுகள் பொது சபையில் காஷ்மீர் பிரச்னைகுறித்து துருக்கி அதிபர் ரெசெப் தயிப் ஏர்டோகன் மீண்டும் பேசியிருப்பதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பொது விவாதத்திற்கு பதிவு செய்து அனுப்பப்பட்ட காணொளியில், ஏர்டோகன் காஷ்மீர் பிரச்னை குறித்து பேசியிருந்தார்.

பீமாகோரேகான் வழக்கு – ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவுலாகா பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம்

காஷ்மீர் குறித்து துருக்கி பேசியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்திருந்த இந்தியா, ”துருக்கி மற்ற நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும். அதன் கொள்கைகளை இன்னும் ஆழமாக பிரதிபலிக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டின் பொது விவாதத்தின்போது பேசிய ஏர்டோகன், ”74 ஆண்டுகளாக நீடித்து வரும் காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பதில் எங்கள் ஆதரவை தெரிவிக்கிறோம். ஐநா விதிமுறைகளுக்கு உட்பட்டு இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையைத் தீர்க்க தயாராக இருக்கிறோம்” என கூறியுள்ளார்.

தலித் குழந்தை கோவிலுக்குள் நுழைந்ததால் ‘தீட்டு’ – கோவிலைச் சுத்தம் செய்ய 23,000 அபராதம் விதித்த ஆதிக்கச் சாதியினர்

பாகிஸ்தானுடனான நட்பு காரணமாக ஐநா பொது விவாதத்தில், காஷ்மீர் குறித்து துருக்கி அதிபர் பேசியுள்ளார். கடந்த ஆண்டு அவர் மேற்கொண்ட பாகிஸ்தான் பயணத்தின் போதும் அவர் காஷ்மீர் குறித்து பேசியிருந்தார்.

மேலும், ஏர்டோகன் பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், ”ஏர்டோகனின் கருத்து காஷ்மீரின் வரலாறுபற்றிய புரிதலையோ, இராஜதந்திர நடத்தையையோ பிரதிபலிக்கவில்லை. இது இந்தியா துருக்கி இடையிலான உறவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என கூறியுள்ளது.

பாகிஸ்தானின் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் துருக்கியின் தொடர் முயற்சிகளை இந்தியா நிராகரித்து வருகிறது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்