சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜனவரிஅன்று, துக்ளக் இதழின் 51வது ஆண்டு விழா நடைபெற்றது. ஹெச்.ராஜா, மாஃபா பாண்டியராஜன், மைத்ரேயன் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்ட இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த விழாவில் பேசிய துக்ளக்கின் ஆசிரியர் குருமூர்த்தி, ” தமிழக அரசியல் காமெடி அரசியலாக மாறிவிட்டது. திமுகவும், அதிமுகவும் ஊழல் கட்சிகளே. திமுக குடும்ப ஊழல், அதிமுக கூட்டு ஊழல்” என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக, “வீடு பற்றி எரிகிறது கங்கை ஜலத்திற்கு நாம் காத்துக்கொண்டிருக்க முடியாது, நாம் சாக்கடை ஜலத்தையும் வாரி வீசுவோம்” என்று அருண் செளரி கூறியிருந்ததை மேற்கோள் காட்டிய அவர் “திமுகவை வீழ்த்த சசிகலாவாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் கங்கை ஜலத்துக்கு காத்திருக்காமல் எல்லா ஜலத்தையும் ஏற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது” என்றும் குருமூர்த்தி கூறியுள்ளார்.
இந்நிலையில், பாஜகவுக்கும் அமமுகவுக்கும் அரசியல் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில்,ஜெயலலிதாவின் தோழியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளருமான சசிகலாவுக்கு அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 16, 2021
இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், “ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
”குருமூர்த்தி ஒரு அரசியல் ஒட்டுண்ணி” – பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடும் தாக்கு
”ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் விமர்சகராக, துக்ளக் இதழின் நிறுவன ஆசிரியராக இருந்த திரு. சோ அவர்கள், தனது இறுதி மூச்சு வரை கடுமையான விமர்சனங்களைக் கூட நகைச்சுவை உணர்வோடும் நாகரிக எல்லையைத் தாண்டாமலும் செய்த பெருமைக்குரியவர் அவரைத் தனது ஆசானாகச் சொல்லிக்கொண்டு, துக்ளக் ஆசிரியராக இருக்கும் திரு. குருமூர்த்தி, கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தைக் காட்டுவதாகவும், சோ அவர்களின் பெயருக்கே களங்கம் விளைவிப்பதாகவும் இருந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
”கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல” என்று அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவிப்பு – கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக ஓபிஎஸ் தகவல்
”துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது” என்று டிடிவி தினகரன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுளார்.
Gurumoorthy came to support Sasikala much after I did. Till yesterday he was for Rajnikant. That was a fiasco for him. Rajnikant understood the game. Now as a political parasite “Guruji” is looking for blood elsewhere
— Subramanian Swamy (@Swamy39) January 15, 2021
குருமூர்த்தியின் திடீர் சசிகலா ஆதரவு நிலைப்படு குறித்து பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி குருமூர்த்தியை ஒரு அரசியல் ஒட்டுண்ணி என விமர்சித்தது குறிபிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.